பீட்ரூட் புலாவ், சுவையான,சத்தான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு வெரைட்டி ரைஸ்.வேகவைத்த சாதம் இருந்தால் போதும்,ஒரு 20 நிமிடத்தில் இந்த பீட்ரூட் புலாவை செய்து விடலாம். குட்டிஸ் லஞ்ச் போஸ்-க்கு செய்து கொடுக்க ஏற்ற ஒரு புலாவ், பார்ப்பதற்கும் அட்டகாசமாக இருப்பதால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இதற்கு சைடு டிஷ் கிரேவி எதுவும் தேவையில்லை சிம்பிளா ஒரு வெங்காய தயிர் பச்சடி இருந்தாலே போதும். வாங்க இப்போ இந்த பீட்ரூட் புலாவ் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
பீட்ரூட் புலாவ் | பீட்ரூட் சாதம் | Beetroot Rice | Beetroot Pulav
Preparation Time : 10 mins | Cooking Time : 20 mins | Serves : 2
Recipe Category: Rice | Recipe Cuisine: Indian
Recipe Category: Rice | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1 கப்(துருவியது )
வேகவைத்த பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
லெமன் -1/2
கரம் மசாலா தூள் - 3/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பில்லை - 1 கொத்து
முந்திரி பருப்பு - 4/5
பட்டை - 1/2 அங்குல துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 1
பிரியாணி இலை -1
எண்ணெய் -2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பீட்ரூட் - 1 கப்(துருவியது )
வேகவைத்த பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
லெமன் -1/2
கரம் மசாலா தூள் - 3/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பில்லை - 1 கொத்து
முந்திரி பருப்பு - 4/5
பட்டை - 1/2 அங்குல துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 1
பிரியாணி இலை -1
எண்ணெய் -2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
முதலில் பீட்ரூட்யை துருவி கொள்ளவும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மெலிதாக அரிந்து கொள்ளவும்.ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அது சூடானபின் அதில் பட்டை,கிராம்பு,பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு 30 நொடி வதக்கி கொள்ளவும்.பின் அதில் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ,வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு பீட்ரூட் வேகும் வரை வதக்கி கொள்ளவும்.வேகவைத்த அரிசியை கொஞ்சம் நேரம் ஆறவிடவும். பீட்ரூட் வெந்த பின் அதில் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுப்பை அணைத்துவிட்டு,வேகவைத்த சாதம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாதத்தை மெதுவாக எல்லாம் ஒன்றாக சேரும்வரை கிளறி விடவும்.கடைசியாக கொத்தமல்லி இலையை மேலே தூவி கொள்ளவும்.சுவையான மற்றும் சத்தான பீட்ரூட் புலாவ் ரெடி !!! வெங்காய தயிர் பச்சடி உடன் பரிமாறவும்.
குறிப்புக்கள்
No comments:
Post a Comment