Wednesday, September 26, 2018

மஷ்ரூம் மசாலா | Mushroom Masala

மஷ்ரூம் மசாலா, சுவையான இந்த மஷ்ரூம் மசாலா சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். இந்த ரெசிபியில் கொடுத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி மசாலாவை நீங்கள் ஒரு நாள் முன்னாடியே கூட செய்து வைத்துவிடலாம், தேவைப்படும் போது சூடு பண்ணி அதில் மஷ்ரூம்,பன்னீர் மற்றும் அவித்த காய்கறிகள் எப்படி எதுவென்றாலும் சேர்த்து நொடியில் ஒரு சைடு டிஷ் ரெடி பண்ணிவிடலாம். சுவையான இந்த மஷ்ரூம் மசாலா எப்படி செய்வதுனு இப்போ பார்க்கலாம்.

மஷ்ரூம் மசாலா | Mushroom Masala

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மஷ்ரூம்   - 1 கப்(நறுக்கியது )
குடை மிளகாய் - 1 கப் (நறுக்கியது ) 
வெங்காயம் - 2 
தக்காளி - 2
இஞ்சி - 1/2 இன்ச்  துண்டு 
பூண்டு  - 5 பல் 
சீரகம் - 1/4 டீஸ்பூன்  
சோம்பு - 1/4 டீஸ்பூன் 
முந்திரி பருப்பு - 4
மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன் 
மிளகாய் பொடி - 1/2 டீ ஸ்பூன் 
கொத்தமல்லி பொடி - 2  ஸ்பூன் 
எண்ணெய்  - 2 டேபிள் ஸ்பூன் 
பட்டை - 1/2 அங்குலம் துண்டு 
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
கொத்தமல்லி இலை - தேவைக்கேற்ப 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
முதலில் வெங்காயம்,தக்காளி மற்றும் இஞ்சி பூண்டை சிறிதாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு வாணலில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம் ,இஞ்சி மற்றும் பூண்டு கூடவே சிறுதளவு உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும்.பின்பு முந்திரி பருப்பு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு தக்காளி வேகும் வரை வதக்கி கொள்ளவும். பின் அதனை சிறுது நேரம் ஆற விடவும்.ஆறியபின் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும். மீதும் ஒரு வாணலில் 1 டேபிள் ஸ்பூன் பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து கொள்ளவும்.அடுத்து அரைத்த விழுது  மற்றும் மஞ்சள்,மிளகாய், கொத்தமல்லி பொடி & உப்பை சேர்த்து கொள்ளவும்.மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரம் கொதிக்க விடவும் (தேவைப்பட்டால் இடையில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும் ). கடைசியாக கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.இதற்கிடையில் மஷ்ரூம் மாற்றம் குடை மிளகாயை சிறு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.வதக்கிய மஷ்ரூம் மற்றும்  குடை மிளகாயை மசாலாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி கொள்ளவும் . சுவையான மஷ்ரூம் மசாலா தயார்.
குறிப்புக்கள் 
  • உங்கள் தேவைக்கேற்ப மசாலாவில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  • இன்னும் நன்கு மசாலா வாசம் வேண்டுமென்றால் ஒரு சிறு துண்டு பட்டை,1 கிராம்பு மற்றும் 1 ஏலக்காயை வெங்காயம் தக்காளியுடன் வதக்கி அரைத்து கொள்ளவும்.

No comments:

Post a Comment