Thursday, September 6, 2018

கார பிடி கொழுக்கட்டை | Kara Pidi Kozhukattai

கார பிடிகொழுக்கட்டை, சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு ஹெல்த்தியான ஸ்னாக்ஸ். இதனை  சாயங்காலம்  ஸ்னாக்ஸ்- ஆகா அல்லது காலை டிபன்-ஆகா சட்னி-யுடன் சாப்பிட அருமையாக இருக்கும். அதுமட்டுமின்றி வரும் விநாயகர் சதுர்த்திக்கு, புதுசா சமையல் செய்றவங்க மோதக கொழுக்கட்டை செய்வது கொஞ்சம் கடினம்னு நெனைச்சீங்கனா, உங்களுக்கு  இந்த பிடிகொழுக்கட்டை ரெசிபி ரொம்ப உபயோகமாக இருக்கும். இதனை செய்வது ரொம்ப சுலபம், மிக குறைவான நேரத்தில் சட்டுனு செய்து முடிச்சிடலாம், வாங்க இப்போ இந்த கார கொழுக்கட்டை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

கார பிடி கொழுக்கட்டை | Kara Pidi Kozhukattai

Preparation Time : 5 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அரிசி மாவு  - 1 கப் 
தண்ணீர் - 3/4 - 1 கப் 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
தாளிக்க 
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு மற்றும் உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கடலை பருப்பு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 
காய்ந்த மிளகாய் -1 (பொடியாக நறுக்கி கொள்ளவும் )


செய்முறை
முதலில் ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து கொள்ளவும்.பின் அதில் தண்ணீர் ஊற்றி உடவே தேவையானளவு உப்பு சேர்த்து  நன்கு கொதி வர விடவும்.அதில் அரிசி மாவு மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி எல்லாம் ஒன்றாக சேர்த்து வந்த பின் இறக்கி கொள்ளவும்.சிறு நேரம் மூடி வைத்து கை பொறுக்கும் சூடு வரும்வரை காத்திருக்கவும்.பின் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொழுக்கட்டை பிடித்து கொள்ளவும்.எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து ஒரு 8-10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.சுவையான கார பிடி கொழுக்கட்டை தயார்.
குறிப்புக்கள் 
  • அரிசி மாவை பொறுத்து 3/4- 1 கப் வரை தண்ணீர் தேவைப்படும்.
  • நல்லெண்ணெய் நல்ல மணத்தை இந்த கொழுக்கட்டைக்கு கொடுக்கும்.

No comments:

Post a Comment