Tuesday, September 11, 2018

இனிப்பு மணி கொழுக்கட்டை | Sweet Mani Kozhukattai

மணி கொழுக்கட்டை,ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு கொழுக்கட்டை ரெசிபி. வரும் விநாயகர் சதுர்த்திக்கு, புதுசா சமையல் செய்றவங்க மோதக கொழுக்கட்டை செய்வது கொஞ்சம் கடினம்னு நெனைச்சீங்கனா, உங்களுக்கு  இந்த மணி கொழுக்கட்டை ரெசிபி ரொம்ப உபயோகமாக இருக்கும். இந்த கொழுக்கட்டைக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டுவதற்கு தான் கொஞ்சம் நேரம் ஆகும் மற்றபடி ரொம்ப சீக்கரம் செய்யக்கூடிய ஒரு இனிப்பு கொழுக்கட்டை. வாங்க இப்போ எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இனிப்பு மணி கொழுக்கட்டை | Sweet Mani Kozhukattai

Preparation Time : 10 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1/2 கப் 
சூடு தண்ணீர் - 1/2 கப்-க்கு கொஞ்சம் கம்மியாக 
நல்லெண்ணெய்  - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
ஏலக்காய் - 1 
வெல்லம் - 1/4 கப் 
துருவிய தேங்காய் -1 டேபிள் ஸ்பூன் 
வெள்ளை எள்ளு - 1 டீஸ்பூன் 

செய்முறை
முதலில் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்,கூடவே அதில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் ,அடுத்து அதில் நன்கு கொதிக்கும் தண்ணீரை சேர்த்து கெட்டியாக மாவை பிசைந்து கொள்ளவும்.அடுத்து அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். பின் இட்லி சட்டியில்/வேக வைக்கும் பாத்திரத்தில் ஒரு 8-10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.ஒரு பாத்திரத்தில்  வெல்லம் மற்றும் அது மூழ்கும் வரை  தண்ணீர் சேர்த்து வெல்லம்  கரையும் வரை கொதிக்க விடவும்.வெல்லம் கரைந்த பின் அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் அடுத்து ஒரு கடாயில் எள்ளை நன்கு வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் வெல்ல கரைசலை ஊற்றி பிசுக்கு பதம் வரும்வரை கொதிக்க விடவும்.அடுத்து அதில் ஏலக்காய்,எள்ளு மற்றும் வேகவைத்த கொழுக்கட்டையை சேர்த்து கொள்ளவும்.நன்கு வெல்ல பாகு கொழுக்கட்டையில் ஓட்டும் வரை கலந்து கொள்ளவும் .கடைசியாக தேங்காயை சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.சுவையான இனிப்பு மணி கொழுக்கட்டை தயார்.
குறிப்புக்கள் 
  • நன்கு கொதிக்கும் தண்ணீரை மாவு பிசைவதற்கு பயன்படுத்தவும்.அப்போதுதான் மாவு நன்கு மிருதுவாக இருக்கும்.
  • நன்கு கையில் எண்ணெய் தடவி கொள்ளவும்,அப்போதுதான் கொழுக்கட்டை ஒட்டாமல் உருட்ட  வரும். 
  • எள்ளு நன்கு வாசம் வரும் வரை வறுத்தால் போதும்.

No comments:

Post a Comment