வீட்டிலே பிள்ளையார் சிலை செய்வது எப்படி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. கொழுக்கட்டை மாவை கொண்டு ரொம்ப சூப்பரா வீட்டிலே இந்த பிள்ளையார் சிலை செய்துவிடலாம், இதற்கு என்று தனியாக எதுவும் பொருட்கள் வாங்க தேவையில்லை. கொஞ்சம் கலர்புல்லாக இருக்கட்டும் என்பதற்காக நான் கொழுக்கட்டை மாவில் கலர் சேர்த்துள்ளேன் ஆனால் கலர் சேர்க்காமலும் இதனை செய்தாலும் பார்க்க ரொம்ப அழகா தான் இருக்கும். நீங்களும் வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு செய்து பாருங்கள்.
செய்முறை
கொழுக்கட்டை மாவில் பிள்ளையார் சிலை செய்வது எப்படி??
Preparation Time : 20 mins | Cooking Time : 0 mins | Makes : 1
Recipe Category: Idol | Recipe Cuisine: Indian
Recipe Category: Idol | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1/2 கப்
சூடு தண்ணீர் - 1/2 கப்-க்கு கொஞ்சம் கம்மியாக
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1/2 கப்
சூடு தண்ணீர் - 1/2 கப்-க்கு கொஞ்சம் கம்மியாக
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
முதலில் அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்,கூடவே எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும், அடுத்து அதில் நன்கு கொதிக்கும் தண்ணீரை சேர்த்து கெட்டியாக மாவை பிசைந்து கொள்ளவும்.தேவைக்கேற்ப மாவை இரண்டு பகுதியாக பிரித்து விருப்பபட்ட(நான் மஞ்சள் மற்றும் நீல கலர் சேர்த்துள்ளேன் ) கலரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அடுத்து மஞ்சள் கலர் மாவை இரண்டு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அதில் ஒரு உருண்டை கொஞ்சம் பெருசா இருக்கும் மாதிரி பார்த்து கொள்ளவும். பெரிய உருண்டையை கீழே வைத்து அடுத்த உருண்டையை மேலே வைக்கவும் நன்கு ஓட்டும் வரை லேசாக அழுத்திக்கொள்ளவும் . அடுத்து ஒரு சிறு துண்டு மாவை எடுத்து காது மாதிரி செய்துகொள்ளவும்.அதனை மேல் உருண்டைகளின் சைடு-யில் ஒட்டி கொள்ளவும்.அடுத்து கை பகுதி செய்து கொள்ளவும். அதில் நுனி பகுதி தட்டையாக இருக்கும் மாதிரி பார்த்துக்கொள்ளவும்.அதனை பிள்ளையாரின் இடது காதுக்கு கீழே ஒட்டி கொள்ளவும். அதே மாதிரி அடுத்த கையை செய்து ஒட்டி கொள்ளவும். அதில் முன்பகுதி தட்டையாக இருக்கும் மாதிரி பார்த்துக்கொள்ளவும்.அடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொழுக்கட்டை மாதிரி கையில் வைக்கவும்.அடுத்து தும்பிகைக்கு தேவையான மாவை எடுத்து நீளமா உருட்டி கொள்ளவும்.அதனை இரண்டு காதுகளுக்கு இடையே ஒட்டி கொள்ளவும். அடுத்து நீல கலர் மாவை எடுத்து கால் பகுதி செய்து கொள்ளவும்.கால் பகுதியை இரண்டு பக்கமும் ஒட்டி கொள்ளவும். நுனி பகுதியில் கொஞ்சம் மஞ்சள் கலர் மாவை எடுத்து பாதம் போல் ஒட்டி கொள்ளவும். நீல கலர் மாவை எடுத்து தந்தம் மாதிரி வைத்து கொள்ளவும். அடுத்து நீல மற்றும் மஞ்சள் கலர் மாவை கொண்டு கீரிடம் மாதிரி செய்துகொள்ளவும். கடைசியாக கடுகை கண் மாதிரி வைத்து கொள்ளவும்.சூப்பர் பிள்ளையார் சிலை தயார்.
குறிப்புக்கள்:- நன்கு நைசாக அரிசி மாவை பயன்படுத்தி கொள்ளவும்.
- நன்கு கொதிக்கும் தண்ணீரை மாவு பிசைவதற்கு பயன்படுத்தவும்.அப்போதுதான் மாவு நன்கு மிருதுவாக இருக்கும்.
- கலர் இல்லாமல் கூட இதே மாதிரி செய்யலாம்.
No comments:
Post a Comment