பீட்ரூட் தயிர் பச்சடி /பீட்ரூட் ரைதா, சுலபமாக செய்யக்கூடிய ஒரு சூப்பர் தயிர் பச்சடி. இது வெஜ் பிரியாணி மற்றும் புலாவ்-வுடன் சாப்பிட நன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி வெயில் காலத்தில் இதை அப்படியே கூட சாப்பிடலாம், வெயிலிற்கும் நல்லது மற்றும் உடலையும் கூலாக வைக்க உதவும்.ஒரே மாதிரி பிரியாணி-க்கு வெங்காய தயிர் பச்சடி செய்து போர் அடிக்குதா கொஞ்சம் வித்தியாசமாக இந்த பீட்ரூட் தயிர் பச்சடி செய்து பாருங்க. இது டிபன் பாஸ்-க்கு குடுத்து விட ரொம்ப ஏதுவானது ஏனென்றால் வெங்காய தயிர் பச்சடி-யில் வெங்காயம் சேர்ப்பதால் அதுனுடன் வாசம் ரொம்ப அதிகமா இருக்கும் அது சில பேருக்கு பிடிக்காது அவர்களுக்கு இந்த பீட்ரூட் தயிர் பச்சடி ஒரு நல்ல மாற்று. வாங்க எப்போ இந்த சுவையான பீட்ரூட் தயிர் பச்சடி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

செய்முறை
பீட்ரூட் தயிர் பச்சடி | பீட்ரூட் ரைதா | Beetroot Raita
Preparation Time : 1 hr | Cooking Time : 20 mins | Serves : 2
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
துருவிய பீட்ரூட் - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு & உளுந்து - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
கறிவேப்பில்லை - சிறுதளவு
துருவிய பீட்ரூட் - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு & உளுந்து - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
கறிவேப்பில்லை - சிறுதளவு
செய்முறை
துருவிய பீட்ரூட் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-யை எடுத்து கொள்ளவும் . ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து கொள்ளவும்.
அடுத்து துருவிய பீட்ரூட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பீட்ரூட் வெந்து பச்சை வாசனை போன பின் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறவிடவும்.
தயிரை ஒரு கிண்ணத்தில் போட்டு உப்பு சேர்த்து நன்கு கட்டியில்லாமல் அடித்து கொள்ளவும். அதில் பீட்ரூட்-யை சேர்த்து கலந்து கொள்ளவும்.
சுவையான பீட்ரூட் தயிர் பச்சடி /பீட்ரூட் ரைதா தயார்.
குறிப்புக்கள்:

- நேரம் ஆக ஆக பீட்ரூட் ரைதா கலர் அடர்த்தியாகும்.
- பீட்ரூட் ஆறியபின் தயிருடன் சேர்க்கவும்.
- பீட்ரூட் தயிருடன் கலந்து ஒரு 30 நிமிடம் கழித்து பரிமாறவும்.
No comments:
Post a Comment