Sunday, September 9, 2018

வேர்க்கடலை கொழுக்கட்டை | Peanut Kozhukattai

வேர்க்கடலை பூர்ண கொழுக்கட்டை, சுவையான மற்றும் ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு மோதக கொழுக்கட்டை. கடலை பருப்பு பூர்ண கொழுக்கட்டை செய்வதை விட இந்த வேர்க்கடலை பூர்ண கொழுக்கட்டை பூர்ண கொழுக்கட்டை செய்வது ரொம்ப ஈசி. வறுத்த வேர்க்கடலை இருந்தால் போதும் ஒரு 20 நிமிடத்தில் இந்த கொழுக்கட்டை தயார்,சுவையும் ரொம்ப நன்றாக இருக்கும். உங்களுக்கு வேர்க்கடலை சுவை பிடிக்கும் என்றால் கண்டிப்பாக வரும் விநாயர் சதுர்த்திக்கு இந்த மோதக கொழுக்கட்டையை செய்து பாருங்கள், குட்டிஸ் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

வேர்க்கடலை கொழுக்கட்டை | Peanut Kozhukattai

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsMakes :
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 1/4 கப்
துருவிய தேங்காய் -2 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் - 1 
வெல்லம் - 1/4 கப் (கோபுரமாக)
மேல் மாவிற்கு தேவையான பொருட்கள் 
அரிசி மாவு - 1/2 கப் 
சூடு தண்ணீர் - 1/2 கப்-க்கு கொஞ்சம் கம்மியாக 
நல்லெண்ணெய்  - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 


செய்முறை
முதலில் வெறும் வாணலில் வேர்க்கடலையை நன்கு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.பின் ஒரு கடாயில் வெல்லம் மற்றும் அது மூழ்கும் வரை  தண்ணீர் சேர்த்து வெல்லம்  கரையும் வரை கொதிக்க விடவும்.இதற்கிடையில் வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்.அதனை வெல்ல பாகுடன் சேர்த்து கொள்ளவும்,கூடவே தேங்காய் துருவைளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இந்த கலவையை அடுப்பில் ஒரு 2-3 நிமிடம் வரை / நன்கு கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.இப்போது மேல் மாவிற்கு தேவையான மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்,கூடவே அதில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் ,அடுத்து அதில் நன்கு கொதிக்கும் தண்ணீரை சேர்த்து கெட்டியாக மாவை பிசைந்து கொள்ளவும். பின் அதனையும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். கையில் நன்கு எண்ணெய் தடவி கொள்ளவும்,ஒரு மாவு உருண்டையை எடுத்து விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல  செய்து கொள்ளவும்.அதில் தேவையானளவு பூரணத்தை வைத்து நன்கு மேல் மாவால் மூடிக்கொள்ளவும்.இதே மாதிரி அனைத்தையும் மோதக கொழுக்கட்டையாக செய்து கொள்ளவும். பின் இட்லி சட்டியில்/வேக வைக்கும் பாத்திரத்தில் ஒரு 8-10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.சுவையான வேர்க்கடலை கொழுக்கட்டை தயார்.
குறிப்புக்கள் 

  • வறுத்த வேர்கடலையாக இருந்தால் மீண்டும் வறுக்க தேவையில்லை.
  • வேர்க்கடலை தோலுடன் இருந்தால் அதனை நீக்கிய பின் பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment