Saturday, September 1, 2018

அவல் நனைத்தது | இனிப்பு அவல் | Sweet Aval

அவல்  நனைத்தது, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபி. நாளை கிருஷ்ண ஜெயந்தி, ரொம்ப பெருசா ஸ்வீட் மற்றும் பலகாரம் எதுவும் பண்ண முடியலைனாலும் ,ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய இந்த இனிப்பு அவல் செய்து பாருங்கள். ஒரு 10 நிமிடத்தில் இதை செய்துடலாம்,சுவையும் அட்டகாசமாக இருக்கும். எல்லாருக்கும் கிருஷ்ணா ஜெயந்தி வாழ்த்துக்கள்,வாங்க இப்போ இந்த அவல்  நனைத்தது, எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

அவல் நனைத்தது | இனிப்பு அவல் | Sweet Aval

Preparation Time : 10 mins | Cooking Time : 0 minsServes :
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அவல் - 1/2 கப் 
பால் - 3/4 கப் 
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் 
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் தூள் - சிறுதளவு 

செய்முறை
ஒரு பாத்திரத்தில் அவலை எடுத்து கொள்ளவும், அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்.அடுத்து தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பாலை பொங்கி வரும் வரை சூடு பண்ணிக்கொள்ளவும்.அதை அவலில் சேர்த்து ஒரு 5 நிமிடம் ஊற விடவும். விருப்பபட்டால் முந்திரி மற்றும் திராட்சை மேலே தூவி பரிமாறவும்.சுவையான நனைத்த அவல் தயார்.
குறிப்புக்கள் 

  • இந்த ரெசிபிக்கு லேசான அவல் நன்றாக இருக்கும். கெட்டி அவல் ஊற கூட கொஞ்ச நேரம் தேவைப்படும்.
  • உங்கள் தேவைக்கேற்ப சர்க்கரை மற்றும் பாலை கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளலாம்.
  • இதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை அவல்  எதுவென்றாலும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment