அவல் நனைச்சது/ இனிப்பு அவல், ரொம்ப சீக்கரம் அவலை கொண்டு செய்யக்கூடிய ஒரு பாரம்பரிய ஸ்நாக்/ஸ்வீட் ரெசிபி. சின்ன வயசில் ஸ்கூல் விட்டு வந்த பின் அடிக்கடி அம்மா செய்து கொடுத்த ஒரு திண்பண்டம் இந்த அவல் நனைச்சது. இப்போவும் எப்போவது ஈவினிங் டைம் இந்த இனிப்பு அவல் செய்வேன், ரொம்ப சுலபமாக செய்யக்கூடியது மற்றும் சுவையும் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹெல்த்தியான ஸ்நாக்-யை நீங்களும் உங்க குட்டிஸ்-க்கு செய்து கொடுத்து பாருங்க, ரொம்ப என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க.
செய்முறை
அவல் நனைச்சது | இனிப்பு அவல்
Preparation Time : 10 mins | Cooking Time : 5 mins mins | Serves : 1 to 2
Recipe Category: Sweet/Snack | Recipe Cuisine: Indian
Recipe Category: Sweet/Snack | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அவல் - 1/2 கப்
பால் - 3/4 கப்
சீனி - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
அவல் - 1/2 கப்
பால் - 3/4 கப்
சீனி - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
முதலில் அவலை ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும், பின் அதில் ஏலக்காய் தூளை சேர்த்து கொள்ளவும். அடுத்து தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு நன்கு கொள்ளவும். பின் பாலை நன்கு காய்ச்சி கொள்ளவும்.சூடான பாலை அவலில் ஊற்றவும். இதனை ஒரு 10 நிமிடம் ஊற விடவும்.சுவையான அவல் சாப்பிட தயார்.
குறிப்புக்கள் - உங்களுக்கு தேவைபட்டால் பாலை கூட ஒரு 1/4 கப் சேர்த்து கொள்ளலாம்.
- ஏலக்காய் மற்றும் தேங்காய் அவலுக்கு நல்ல மணமும், சுவையும் கொடுக்கும்.
- லேசான அவல் இதற்கு ரொம்ப நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment