சீடை, அரிசி மாவில் செய்யப்படும் ஒரு பாரம்பரியமான பலகாரம்/தின்பண்டம். இதனை வீட்டில் செய்வது ரொம்ப சுலபம்,சுவையும் அட்டகாசமாக இருக்கும். இன்னைக்கு நான் ஷேர் பண்ற சீடை ரெசிபி எங்க அம்மாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது. எங்க வீட்டில் சீடை செய்யும் போது அதில் கொஞ்சம் தேங்காய் துருவல் சேர்ப்போம்,அது சீடைக்கு நல்ல ஒரு மணத்தையும்,சுவையையும் கொடுக்கும். வருகின்ற கிருஷ்ண ஜெயந்திக்கு நீங்களும் இந்த சுவையான சீடையை செய்து பாருங்கள். 
செய்முறை
சீடை | தேங்காய் சீடை | கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி
Preparation Time : 20 mins | Cooking Time : 20 mins | Makes : 1 & 1/2 cup
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையானளவு
அரிசி மாவு - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையானளவு
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,தேங்காய் துருவல்,வெண்ணெய்,சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதில் தேவையானளவு தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக மாவை பிசைந்து கொள்ளவும். பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஒரு வாணலில் காய வைத்துக்கொள்ளவும்.
எண்ணெய் சூடான பின் அதில் மாவு உருண்டைகளை போட்டு நன்கு சிவக்க பொரித்து எடுக்கவும்.
சுவையான மற்றும் மொறுமொறுப்பான சீடை தயார்.
குறிப்புக்கள்:



- மாவை உருண்டைகளாக உருட்டும் போது அதிகம் அழுத்தம் குடுக்காமல் உருட்டி கொள்ளவும்
- தேங்காய் துருவல் நைசாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும், பெரிய துண்டுகள் இருந்தால் சீடை வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்
- மெல்லிய தீயில் பொரித்து எடுக்கவும்.
No comments:
Post a Comment