ராகி கொழுக்கட்டை, ஒரு சுவையான மற்றும் சத்தான ஈவினிங் ஸ்னாக்ஸ். சிறு தானியங்களில் நமது உடலுக்கு தேவையான சத்துகள் நிறைய உள்ளன. அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவது ரொம்ப நல்லது. சிறுதானியங்களை கொண்டு தோசை, கூழ்,களி இப்படி செய்து போர் அடிக்குதா ?? கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி கொழுக்கட்டை செய்து பாருங்க, சாயங்காலம் ஸ்னாக்ஸ்-ஆக சாப்பிட ரொம்ப நல்லாயிருக்கும். அதுமட்டுமின்றி வீட்டில் சுகர் இருக்குற பெரியவங்க அரிசியில் செய்த கொழுக்கட்டை சாப்பிட்டால் சுகர் அதிகம் ஆகிவிடுமோ பயப்படுவாங்க, அவங்களுக்கும் இந்த ராகி கொழுக்கட்டை ரொம்ப ஏற்ற ஒரு ரெசிபி!!! வாங்க இப்போ இந்த ராகி கொழுக்கட்டை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
ராகி கொழுக்கட்டை| கேழ்வரகு கொழுக்கட்டை | Ragi Kozhukattai
Preparation Time : 20 mins | Cooking Time : 10 mins | Serves : 2
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1/2 கப்
தண்ணீர் - 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து பொடி செய்து கொள்ள
காய்ந்த மிளகாய் - 1
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்த பருப்பு - 3/4 டீஸ்பூன்
ராகி மாவு - 1/2 கப்
தண்ணீர் - 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து பொடி செய்து கொள்ள
காய்ந்த மிளகாய் - 1
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்த பருப்பு - 3/4 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ராகி மாவை வெறும் வாணலில் போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.அதில் உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதை மாவில் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.சிறு சிறு உருண்டைகளாக மாவை உருட்டி கொள்ளவும்.அதனை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் 8-10 நிமிடம் வேக வைக்கவும்.இடைப்பட்ட நேரத்தில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸில் கொரகொரவென்று பொடித்து எடுத்துக்கொள்ளவும்.அடுத்து தாளிக்க ஒரு வாணலில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு,உளுந்து மற்றும் கறிவேப்பில்லை தாளித்த பின் அதில் பொடித்த பொடியை சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.பின் வேகவைத்து எடுத்த கொழுக்கட்டையை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து எடுத்து கொள்ளவும்.சுவையான மற்றும் சத்தான ராகி கொழுக்கட்டை தயார் .
குறிப்புக்கள்
- ராகி மாவை நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
- உங்கள் காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய் கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளவும்.
No comments:
Post a Comment