பன்னீர் ப்ரைட் ரைஸ், சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் ப்ரைட் ரைஸ். இப்போது எல்லாம் குட்டிஸ் முதல் பெரியவங்க வரை எல்லாருக்கும் indochinese ஐட்டம் என்றால் ரொம்ப பிடிக்குது. அதை அடிக்கடி கடையில் வாங்காமல் நம்ம வீட்டிலே ரொம்ப சுலபமாக குறைந்த நேரத்தில் செய்துவிடலாம்.கடையில் சாப்பிடுவதை விட வீட்டிலே செய்து சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமானது. வேகவைத்த சாதம் இருந்தால் போதும் சட்டென்று ஒரு 20 நிமிடத்தில் இந்த ப்ரைட் ரைஸ் செய்துவிடலாம். அது மற்றுமின்றி இந்த ப்ரைட் ரைஸ்-யை மிதமாகி போன சாதத்தில் கூட செய்யலாம்,ரொம்ப நன்றாக இருக்கும்.வாங்க எப்போ இந்த பன்னீர் ப்ரைட் ரைஸ் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
பன்னீர் ப்ரைட் ரைஸ் | Paneer Fried Rice
Preparation Time : 10 mins | Cooking Time : 20 mins | Serves : 2
Recipe Category: Rice | Recipe Cuisine: IndoChinese
Recipe Category: Rice | Recipe Cuisine: IndoChinese
தேவையான பொருட்கள்
பாஸ்மதி சாதம் - 3 கப்
பன்னீர் - 1 கப்
காய்கறிகள் - 3/4 கப்(கேரட்,முட்டைகோஸ் மற்றும் குடை மிளகாய் )
பூண்டு - 2 பல்
வெங்காய தாள் - 3
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
பாஸ்மதி சாதம் - 3 கப்
பன்னீர் - 1 கப்
காய்கறிகள் - 3/4 கப்(கேரட்,முட்டைகோஸ் மற்றும் குடை மிளகாய் )
பூண்டு - 2 பல்
வெங்காய தாள் - 3
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
முதலில் பாசுமதி அரிசியை உதிரி உதிரியாக வேகவைத்து கொஞ்சம் நேரம் ஆறவிடவும். அடுத்து காய்கறிகளை நன்கு மெலிதாக நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்,பூண்டை நன்கு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காய தாளின் வெள்ளை நிற பகுதியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பன்னீரை சிறுசிறு சதுரமாக நறுக்கி பயன்படுத்தும் வரை வெந்நீரில் போட்டு வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,சூடானபின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும்.பூண்டு நன்கு வாசம் வரும் வரை வதக்கி கொள்ளவும் ,அடுத்து வெங்காய தாள்,காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.காய்கறிகள் வெந்தபின் அதில் சோயா சாஸ் மற்றும் பன்னீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.வேகவைத்த சாதம் மற்றும் மிளகு தூள் & உப்பு சேர்த்து லேசாக பிரட்டி எடுத்து கொள்ளவும்.கடைசியாக பொடியாக நறுக்கிய வெங்காய தாளின் பச்சை நிற பகுதியை மேலே தூவி கொள்ளவும்.சுவையாக பன்னீர் ப்ரைட் ரைஸ் தயார்.
குறிப்புக்கள்
குறிப்புக்கள்
- காய்கறிகளை ரொம்ப soft-ஆ வேகவைக்க வேண்டாம்,கொஞ்சம் crunchy-ஆ இருந்தால் தான் ப்ரைட் ரைஸ்-க்கு நல்ல இருக்கும்.
- நல்ல brand சோயா சாஸ் பயன்படுத்திக்கொள்ளவும்,அப்போது தான் சுவையும் மற்றும் மணமும் நன்றாக இருக்கும்.
- நல்லெண்ணெய் ப்ரைட் ரைஸ் ரொம்ப நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment