ரவை தோசை, சுலபமாக மீந்து போன தோசை மாவை கொண்டு செய்ய கூடிய ஒரு சுவையான ரவா தோசை . எங்க வீட்டில் எப்போதெல்லாம் தோசை மாவு கம்மியா இருக்கோ அப்போ அநேகநேரம் இந்த தோசை தான் டின்னர்-ஆ இருக்கும். சதா ரவா தோசை போல் இது ரொம்ப மெல்லிசாக இருக்காது ஆனா சுவை அட்டகாசமாக இருக்கும். இதில் வெங்காயம் மற்றும் கடலை பருப்பு எல்லாம் தாளித்து போடுவதால் இந்த தோசையை ரொம்ப மெல்லிசாக ஊற்ற முடியாது ஆனால் அந்த தாளிப்பு தான் இந்த தோசைக்கு மேலும் சுவையை கொடுக்குது.வாங்க இப்போ இந்த ரவா தோசை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
ரவை தோசை | ரவா தோசை
Preparation Time : 30 mins | Cooking Time : 15 mins | Serves : 2
Recipe Category: Dosai | Recipe Cuisine: Indian
Recipe Category: Dosai | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
ரவை - 1/2 கப்
கொத்தமல்லி இலை - சிறுதளவு
உப்பு - தேவைகேற்ப
தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1(சிறுது )
கறிவேப்பில்லை - 1 கொத்து
தோசை மாவு - 1 கப்
ரவை - 1/2 கப்
கொத்தமல்லி இலை - சிறுதளவு
உப்பு - தேவைகேற்ப
தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1(சிறுது )
கறிவேப்பில்லை - 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை போட்டு முழுகும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின் அதை தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அடுத்து தேவையானளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை ஊற்றும் பதத்திற்கு மாவை கரைத்து வைத்துக்கொள்ளவும்.வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளித்து கொள்ளவும்.அடுத்து கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்த பின்,வெங்காயம்,பச்சை மிளகாய் கறிவேப்பில்லை மற்றும் சிறுதளவு உப்பு சேர்த்து வெங்காயம் லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.வதக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து கொள்ளவும் கூடவே தேவையானளவு கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். அவ்வளவு தான் மாவு தயார். அடுத்து தோசை உற்ற தோசை கல்லை காய வைத்துக்கொள்ளவும். ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்த்து கொள்ளவும்.சீக்கரம் வேக ஒரு மூடியால் மூடி வைத்து ஒரு 2 நிமிடம் வேகவிடவும், பின் தோசையை திருப்பி அடுத்த பக்கமும் வேக விட்டு எடுத்து கொள்ளவும்.சுவையான ரவா தோசை தயார் !!! சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.
குறிப்புக்கள் - எல்லா பொருட்களும் தாளித்து சேர்த்துள்ளதால் இந்த தோசையை ரொம்ப மெல்லிசாக ஊற்ற முடியாது.
- அதனால் தீயை குறைய வைத்து முடிந்தளவு தோசையை மெல்லிசாக ஊற்றவும்.
- கடலை பருப்பு உங்களுக்கு தோசையில் பிடிக்காது என்றால் அதை தவிர்த்துவிடலாம்.
No comments:
Post a Comment