டிபன் சாம்பார், பாசி/சிறு பருப்பு கொண்டு செய்யும் இந்த சாம்பார் இட்லி மற்றும் தோசை போன்ற டிபன் ஐட்டங்களுடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். டிபன் சாம்பாருக்கு நாம் சாப்பாடுக்கு சேர்ப்பது போல் புளி எல்லாம் சேர்க்க தேவையில்லை, தக்காளி மட்டும் பயன்படுத்தினால் போதும் ஏனென்றால் இட்லி மற்றும் தோசை வகைகளில் ஏற்கனவே லேசாக புளிப்பு இருப்பதால் சாம்பாரில் நாம் அதிகம் புளிப்பு சேர்க்க தேவையில்லை. ஆனால் நீங்கள் விருப்பினால் புளி சேர்த்து கொள்ளலாம். வாங்க சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய எந்த டிபன் சாம்பார் எப்படினு பார்க்கலாம்.
டிபன் சாம்பார் | இட்லி சாம்பார் | Tiffin Sambar
Preparation Time : 10 mins | Cooking Time : 20 mins | Serves : 2
Recipe Category: Sambar | Recipe Cuisine: Indian
Recipe Category: Sambar | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பாசி/சிறு பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
காய்கறிகள் - 1/4 கப் (உருளை,கேரட் ,பீன்ஸ்)
சின்ன வெங்காயம் - 5
தக்காளி -1
பச்சை மிளகாய் -1
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
கொத்தமல்லி இலை - சிறுதளவு
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறுதளவு
பாசி/சிறு பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
காய்கறிகள் - 1/4 கப் (உருளை,கேரட் ,பீன்ஸ்)
சின்ன வெங்காயம் - 5
தக்காளி -1
பச்சை மிளகாய் -1
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
கொத்தமல்லி இலை - சிறுதளவு
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறுதளவு
செய்முறை
முதலில் குக்கரில் கழுவிய பருப்பு, காய்கறிகள், வெங்காயம்,தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கொள்ளவும்,அடுத்து அதில் பெருங்காயம் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு 3 விசில் வேகவைத்து கொள்ளவும்.அதில் மஞ்சள்,மிளகாய்,சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து பருப்புடன் நன்கு மசித்து கொள்ளவும், தேவையான தண்ணீர் சேர்த்து அதை கொதிக்க விடவும்.நன்கு கொதித்து மசாலா வாசம் போனபின், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். கடைசியான கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.
குறிப்புக்கள்: - டிபன் சாம்பார் என்பதால் குறைய காய்கறிகள் சேர்த்தால் போதும்.
- துவரம் பருப்பு சேர்க்காமல் வெறும் பாசி பருப்பை கொண்டு செய்தாலும் நன்றாக இருக்கும்.
Super recipes
ReplyDeleteThanks Padmini
Delete