பூரி கிழங்கு, உருளை கிழங்கை கொண்டு செய்யப்படும் இந்த மசாலா பூரிக்கு ஒரு சூப்பர் சைடு டிஷ். கொஞ்சம் பொருட்களை வைத்து ரொம்ப சீக்கரம் செய்யக்கூடிய ஒரு சூப்பர் டிஷ்.ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி இந்த பூரி கிழங்கு செய்வார்கள், இன்னைக்கு ரெசிபில் எங்க வீட்டில் எப்படி செய்வோம்னு பார்க்கலாம். நிறைய பேர் இதில் தக்காளி சேர்க்க மாட்டாங்க, ஆனா எங்க வீட்டில் சேர்ப்போம், அது ஒரு மெல்லிய புளிப்பு சுவையை கொடுக்கும், பூரியுடன் சாப்பிட ரொம்ப சூப்பரா இருக்கும்,நீங்க இதுவரை தக்காளி சேர்த்து ட்ரை பண்ணியது இல்லையென்றால் கண்டிப்பாக அடுத்தமுறை செய்யும் போது ட்ரை பண்ணுங்க,ரொம்ப நல்ல இருக்கும்.
செய்முறை
பூரி கிழங்கு | Poori Kizhangu
Preparation Time : 10 mins | Cooking Time : 20 mins | Serves : 3
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு - 3
வெங்காயம் - 1
தக்காளி -1/2
பச்சை மிளகாய் - 2,3
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - 1/2 கப்
கடலை மாவு - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை & கொத்தமல்லி - சிறுதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு மற்றும் உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
உருளை கிழங்கு - 3
வெங்காயம் - 1
தக்காளி -1/2
பச்சை மிளகாய் - 2,3
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - 1/2 கப்
கடலை மாவு - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை & கொத்தமல்லி - சிறுதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு மற்றும் உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
முதலில் உருளை கிழங்கை பிரஷர் குக்கரில் ஒரு 3 விசில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.அடுத்து வெங்காயத்தை நீளவாக்கில், தக்காளியை சிறு சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும்,பூண்டை லேசாக நசுக்கி கொள்ளவும். ஒரு கடாயை காய வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து கொள்ளவும், அடுத்து வெங்காயம்,பச்சை மிளகாய், தக்காளி , பூண்டு மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கிய பின் அதில் தக்காளி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பின் தண்ணீரை சேர்த்து வெங்காயத்தை நன்கு வேக விடவும்.இடையில் வேகவைத்த உருளை கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் வெந்தபின் உருளை கிழங்கு மற்றும் உப்பை சேர்க்கவும், கூடவே கடலைமாவை கொஞ்சம் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து அதையும் சேர்த்து கொள்ளவும்.ஒரு 10 நிமிடம் மெல்லிய தீயில் கொதிக்க வைத்து இருக்கவும்.கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.சூப்பரான பூரி கிழங்கு தயார்.
குறிப்புக்கள்:- கடலை மாவு அதிகமாக சேர்க்க வேண்டாம், பூரி கிழங்கு ரொம்ப கெட்டியாகி விடும்
- பச்சை மிளகாய் உங்கள் காரத்திற்கு தகுந்தாற்போல் சேர்த்து கொள்ளவும்.
No comments:
Post a Comment