சேமியா பிரியாணி, சுவையான மற்றும் எளிதில் சேமியாவை வைத்து செய்யக்கூடிய ஒரு பிரியாணி. அரிசியில் பிரியாணி செய்து போர் அடிக்குதா ?? அப்போ கொஞ்சம் விசித்தியாசமாக இந்த சேமியா பிரியாணி செய்து பாருங்கள்.எப்போவும் செய்யும் பிரியாணியை விட இதை செய்ய பாதி நேரம் தான் ஆகும் ஆனால் சுவையும்,மணமும் அட்டகாசமாக இருக்கும். இதற்கு சைடு டிஷ் கிரேவி எதுவும் தேவையில்லை சிம்பிளா ஒரு வெங்காய தயிர் பச்சடி இருந்தால் போதும், லஞ்ச்/டின்னர் -க்கு அல்லது டிபன் பாஸ்-க்கு இப்படினு எப்போ வேணும்னாலும் செய்யக்கூடிய ஒரு சூப்பர் டிஷ், வாங்க இப்போ இந்த சேமியா பிரியாணியை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
சேமியா பிரியாணி | Semiya Biryani
Preparation Time : 10 mins | Cooking Time : 20 mins | Serves : 2
Recipe Category: Biryani | Recipe Cuisine: Indian
Recipe Category: Biryani | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
சேமியா - 1/2 கப்
காய்கறிகள் - 1 கப்(உருளை,கேரட்,பட்டாணி )
வெங்காயம் - 1/2
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பில்லை - 1 கொத்து
பட்டை - 1/2 அங்குல துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
எண்ணெய் -1 டீஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
சேமியா - 1/2 கப்
காய்கறிகள் - 1 கப்(உருளை,கேரட்,பட்டாணி )
வெங்காயம் - 1/2
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பில்லை - 1 கொத்து
பட்டை - 1/2 அங்குல துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
எண்ணெய் -1 டீஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
முதலில் உருளைகிழங்கு மற்றும் கேரட் இரண்டையும் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின் அதனுடன் ஊற வைத்த பட்டாணியை சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அது சூடானபின் அதில் பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு 30 நொடி வதக்கி கொள்ளவும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து கொள்ளவும்.
கூடவே மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து தக்காளி நன்கு வதக்கவும்,அடுத்து அதில் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து கொள்ளவும்.
தேவையான தண்ணீர்,கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கொதி வர விடவும்.
கொதித்த பின் அதில் வறுத்த சேமியாவை சேர்த்து,நன்கு ஒரு முறை கலந்து மூடியால் மூடி விடவும்.தீயை மெலிதாக வைக்கவும்.
ஒரு 4- 5 நிமிடத்தில் சேமியா நன்கு வெந்துவிடும். அடுப்பை அணைத்துவிட்டு கரண்டியால் சேமியாவை மெதுவாக கிளறி விடவும்.
சுவையான சேமியா பிரியாணி தயார். வெங்காய தயிர் பச்சடி உடன் பரிமாறவும்.
குறிப்புக்கள்






- விருப்பப்பட்டால் கொஞ்சம் புதினா மற்றும் முந்திரி பருப்பு கூட சேர்த்து கொள்ளலாம். இன்னும் சுவையாக இருக்கும்.
- காய்கறிகளை ரொம்ப குழைவாக வேகவைக்க வேண்டாம். ஒரு முக்காப்பதம் வெந்திருந்தால் போதும் மீதி சேமியாவுடன் சேர்த்து வெந்து விடும்.
- நான் வறுத்த சேமியாவை இதில் பயன்படுத்தியுள்ளேன்,வறுக்காத சேமியாவாக இருந்தால் ஒரு 1/2 டீஸ்பூன் நெய்யில் வறுத்து சேர்த்து கொள்ளவும். அப்போதுதான் உதிரி உதிரியாக வரும்.
No comments:
Post a Comment