வேர்க்கடலை சட்னி, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் சட்னி. இது இட்லி,தோசை மற்றும் உப்மா வகைகளுக்கு ரொம்ப நன்றாக இருக்கும்.வறுத்த வேர்க்கடலை ரெடியாக இருந்தால் ஒரு 2 நிமிடத்தில் இந்த சட்னி செய்துவிடலாம். வாங்க எப்போ இந்த சுவையான வேர்க்கடலை சட்னி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
வேர்க்கடலை சட்னி | Peanut Chutney
Preparation Time : 5 mins | Cooking Time : 5 mins | Serves : 2
Recipe Category: Chutney | Recipe Cuisine: Indian
Recipe Category: Chutney | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 1/4 கப் (வறுத்தது )
தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
காய்த்த மிளகாய் - 2
பூண்டு - 1 பல்
புளி - சிறுதளவு
உப்பு - தேவையானளவு
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு மற்றும் உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறுதளவு
வேர்க்கடலை - 1/4 கப் (வறுத்தது )
தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
காய்த்த மிளகாய் - 2
பூண்டு - 1 பல்
புளி - சிறுதளவு
உப்பு - தேவையானளவு
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு மற்றும் உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறுதளவு
செய்முறை
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை, பூண்டு,மிளகாய் மற்றும் புளி சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.அடுத்து அதில் தேங்காய்,உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.
குறிப்புக்கள் - நன்கு வறுத்த மற்றும் தோல் நீக்கிய வேர்க்கடலையை பயன்படுத்தவும்.
- உங்கள் தேவைக்குக்கேற்ப மிளகாயை சேர்த்து கொள்ளவும்.
No comments:
Post a Comment