வாழைக்காய் வறுவல், சுலபமாக செய்யக்கூடிய ஒரு வறுவல் ரெசிபி இது. இந்த வாழைக்காயை வறுவல் சாம்பார் மற்றும் புளி குழம்புடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். நன்கு மொறுமொறுவென்று இருப்பதால் குட்டிஸ் கூட இதனை விரும்பி சாப்பிடுவாங்க, வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
வாழைக்காய் வறுவல் | Vazhakkai Varuval
Preparation Time : 10 mins | Cooking Time : 15 mins | Serves : 2
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - 1 & 1/2 டீஸ்பூன்
வாழைக்காய் - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - 1 & 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் வாழைக்காயை தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து விடவும்.தண்ணீரிலிருந்து வாழைக்காயை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கொத்தமல்லி தூள்,கரம் மசாலா,உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அதனை ஒரு 10 நிமிடம் ஊற விடவும்.பின் வாணலில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி,சூடான பின்,அதில் வாழைக்காயை போட்டு இரண்டு பக்கமும் நன்கு மொறுமொறுவென்று வரும் வரை வறுத்து எடுக்கவும்.சுவையான வாழைக்காயை வறுவல் தயார்.
குறிப்புக்கள் - வாழைக்காயை மெலிதாக நறுக்கி கொள்ளவும்,அப்போதுதான் ரொம்ப சீக்கரம் வேகும்.
- மெல்லிய தீயில் வாழைக்காயை வறுக்கவும், இல்லாவிட்டால் அடிபிடித்து விடும்.
No comments:
Post a Comment