ராகி/கேழ்வரகு தோசை, சத்தான மற்றும் சுவையான இந்த தோசையை நொடியில் செய்துவிடலாம். இந்த தோசைக்கு மாவு அரைக்கவோ அல்லது புளிக்கவைக்கவோ தேவையில்லை, உடனடியாக செய்யக்கூடிய ஒரு சூப்பர் தோசை. நிறைய சத்துள்ள சிறுதானியங்களை நமது உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது ரொம்ப நல்லது,அதனை வழக்கமான களி அல்லது கஞ்சியாக இல்லாமல் இந்த மாதிரி வித்தியாசமாக தோசையாக செய்து கொடுத்தால் வீட்டில் பெரியவங்க முதல் குட்டிஸ் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க இப்போ இதை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
ராகி தோசை | கேழ்வரகு தோசை | Instant Ragi Dosai
Preparation Time : 5 mins | Cooking Time : 15 mins | Makes : 6
Recipe Category: Breakfast | Recipe Cuisine: Indian
Recipe Category: Breakfast | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது )
தண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தோசைக்கு தேவையானளவு
ராகி மாவு - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது )
தண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தோசைக்கு தேவையானளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.தேவையானளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு தண்ணீராக கலந்து வைத்து கொள்ளவும்.தோசை கல்லை காய வைத்து, கரைத்து வைத்துள்ள மாவை பரவலாக ஊற்றவும். தோசையை சுற்றி தேவையானளவு எண்ணெய் சேர்க்கவும். இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து எடுக்கவும்.சுவையான மற்றும் சத்தான ராகி தோசை தயார்.
குறிப்புக்கள் - இந்த தோசையை வெங்காயம் சேர்க்காமலும் செய்யலாம்.
- மாவின் தரத்தை பொறுத்து தண்ணீர் கூடவோ அல்லது குறையவோ தேவைப்படும்.
No comments:
Post a Comment