Thursday, January 31, 2019

காஞ்சிபுரம் இட்லி | Kancheepuram Idli | Idly recipe

காஞ்சிபுரம் இட்லி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரசாதமாக தரப்படும் ஒரு சுவையான இட்லி வகை. கோயிலில் இதற்காக தனியாக இட்லி மாவு தயார் பண்ணுவாங்க , ஆனால் இன்னைக்கு ஷேர் பண்ற இந்த ரெசிபில் நாம் வீட்டில் பயன்படுத்தும் இட்லி மாவை கொண்டே சூப்பரா இந்த இட்லியை நொடியில் செய்து விடலாம். வாங்க இப்போ இந்த பாரம்பரியமான காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

காஞ்சிபுரம் இட்லி | Kancheepuram Idli | Idly recipe

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes : 2 to 3 
Recipe Category: Breakfast/Dinner | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
இட்லி மாவு - 2 கப் 
மிளகு (கொர கொரவென்று  பொடித்தது) - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத்தூள் - 1/8 டீஸ்பூன் 
நெய் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - ஒரு கொத்து 


செய்முறை
முதலில் இட்லி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும், அடுத்து ஒரு வாணலியில் நெய்யை சூடு பண்ணி அதில் மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வாசம் வரும் படி தாளித்து கொள்ளவும்.தாளித்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் இட்லி வேக வைக்க சிறு சிறு டம்ளர்-யை எடுத்து கொள்ளவும்.அடுத்து வாழை இலையை சிறு சிறு பட்டையாக வெட்டி எடுத்து கொள்ளவும்.அதனை டம்ளரின் உட்புறத்தை சுற்றி வைக்கவும்.டம்ளரில் முக்கால் பக்கம் இட்லி மாவை ஊற்றவும், அதனை ஒரு வேகவைக்கும் பாத்திரத்தில் அடுக்கி கொள்ளவும்.மிதமான தீயில் 12-15 நிமிடம் அல்லது இட்லி நன்கு வேகும் வரை வேகவைத்து எடுக்கவும்.சிறுது நேரம் ஆறவிட்டு பின் டம்ளரை தலைகீழ் கவிழ்த்தால் இட்லி அழகாக வெளியே வந்துவிடும், பின் வாழை இலையை எடுத்துவிட்டு பரிமாறவும்.உங்களுக்கு விருப்பபட்டால் சிறு சிறு வட்டமாக இட்லியை வெட்டியும் பரிமாறலாம். சாம்பார் மற்றும் சட்னி இரண்டுமே அட்டகாசமாக இருக்கும்.
குறிப்புக்கள்:
  • டம்ளருக்கு பதில் இட்லி தட்டில் கூட இந்த இட்லியை அவிக்கலாம்.
  • நெய் இந்த இட்லிக்கு நல்ல மணத்தையும் சுவையையும் தரும்.

No comments:

Post a Comment