பாப்கார்ன்,சுவையான மற்றும் மொறுமொறுபான ஒரு ஸ்னாக்ஸ் !!! சினிமா தியேட்டரில் கிடைக்கும் பாப்கார்ன் போல சுவையான பாப்கார்ன் நொடியில் நம் வீட்டிலே செய்து விடலாம்.அதற்கு தேவையான முக்கியமான பொருள் காய்ந்த மக்காச்சோளம், அது இப்போது அனைத்து மளிகை கடைகளிலும் கிடைகிறது,வாங்கி வைத்து கொண்டால் வேணுமென்ற போது சட்டென்று வீட்டிலே செய்து விடலாம்.வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
பாப்கார்ன் செய்முறை
Preparation Time : 5 mins | Cooking Time : 10 mins | Serves : 2
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
காய்ந்த மக்காச்சோளம் - 1/4 கப்
தேங்காய் எண்ணெய் - 1 & 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
நெய் - 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால் )
காய்ந்த மக்காச்சோளம் - 1/4 கப்
தேங்காய் எண்ணெய் - 1 & 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
நெய் - 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால் )
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும், அதில் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து சூடு பண்ணவும்.ஒரு சில காய்ந்த மக்காச்சோளத்தை அதில் சேர்க்கவும்.அவை பொரிந்தபின் மீதமுள்ள மக்காச்சோளம் முழுவதையும் சேர்த்து எண்ணெயில் நன்கு கலந்து விட்டு கொள்ளவும்.பின் ஒரு மூடியால் மூடி அனைத்து மக்காச்சோளமும் பொரியும் வரை காத்திருக்கவும். பொரியும் சத்தம் நின்ற பின் அடுப்பை அனைத்து விட்டு,உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.தேவைப்பட்டால் கடைசியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.சுவையான பாப்கார்ன் தயார்.
குறிப்புக்கள்: - நன்கு அகண்ட பெரிய பாத்திரத்தை பயன்படுத்தவும்.
- தேங்காய் எண்ணெய் பாப்கார்ன்-க்கு நல்ல சுவையை கொடுக்கும்.
- உப்பு தூள் நன்கு நைசாக உள்ளதை பயன்படுத்தவும்.
No comments:
Post a Comment