Thursday, January 17, 2019

பிச்சு போட்ட கோழி கறி | சிக்கன் கறி

பிச்சு போட்ட கோழி கறி, ரொம்ப சுவையான ஒரு சிக்கன் கறி. இது சாதம் மற்றும் இட்லி,தோசை இப்படி எதனுடவும் சாப்பிடவும் அருமையாக இருக்கும். சேலம் பக்கம் உள்ள ரோடு சைடு கடைகளில் இந்த பிச்சு போட்ட சிக்கன் கறி ரொம்ப பிரபலம். கொஞ்ச நாட்களுக்கு முன்பு இந்த ரெசிபி பற்றி கேள்வி பட்டு ஒரு நாள் செய்து பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது. அதிலிருந்து இது ரெகுலராக வீட்டில் செய்யும் ஒரு சிக்கன் டிஷ்-ஆக மாறிவிட்டது.நீங்களும் வித்தியாசமான சிக்கன் கறி செய்து பார்க்கலாம்னு நெனைச்சீங்கனா இதனை ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப நன்றாக இருக்கும்.

பிச்சு போட்ட கோழி கறி

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes : 2 to 4 
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
சிக்கன்(எலும்பு இல்லாத ) - 1/2 கிலோ 
வெங்காயம் - 2(பெரியது )
தக்காளி - 2 
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு 
மஞ்சள் தூள்  - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
பட்டை - 1 அங்குல துண்டு 
கிராம்பு - 6
ஏலக்காய் - 2 
உப்பு - தேவையானளவு 

செய்முறை
முதலில் சிக்கன்-யை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். பின் அதனை பிரஷர் குக்கரில் சேர்த்து கூடவே 1/8 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.அடுத்து அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.அனைத்தையும் கலந்து ஒரு 3 விசில் வேகவைத்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து கொள்ளவும்.பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து கொள்ளவும்.வெங்காயம் நன்கு வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும், இஞ்சி பூண்டு வாசம் போனபின் அதில் தக்காளி சேர்த்து கொள்ளவும்.அடுத்து அதில் மஞ்சள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி கொள்ளவும்.சிக்கன்-யை சிறுது சிறிதாக பிச்சு கொள்ளவும்.மசாலா நன்கு வதங்கிய பின் சிக்கன் மற்றும் வேக வைத்த தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.தண்ணீர் நன்கு வற்றும் வரும் வரை வதக்கவும், பின் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.சிக்கன் நன்கு சுருண்டு வரும் வதக்கி கொள்ளவும். பின் கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.சுவையான பிச்சு போட்ட கோழி கறி தயார்.
குறிப்புக்கள்
  • தேங்காய் எண்ணெய் இந்த கறிக்கு நல்ல மணத்தை கொடுக்கும்.
  • கரம் ரொம்ப கம்மியாக இருந்தால் போதும் என்றால் மிளகாய் தூளை தவிர்த்து வெறும் மிளகு தூளை மட்டும் சேர்த்து கொள்ளலாம்.
  • எலும்பு இல்லாத சிக்கன் கிடைக்கவில்லையென்றால், எலும்பு உள்ளதே பயன்படுத்தி கொள்ளலாம், வேக வைத்த பின் எலும்பை நீக்கி கொள்ளவும்.

No comments:

Post a Comment