Tuesday, January 22, 2019

கரும்பு சாறு | கரும்பு ஜூஸ் | Karumbu Juice

கரும்பு சாறு/ ஜூஸ், வீட்டிலே கரும்பு ஜூஸ் எப்படி செய்வதுனு இன்னைக்கு பார்க்கலாம். பொங்கலுக்கு வாங்கின கரும்பு இன்னும் அப்படியே இருக்கா ?? யாரும் சாப்பிடவில்லையா ?? சூப்பரான இந்த கரும்பு ஜூஸ்-யை செய்து கொடுத்து பாருங்க, சட்டுனு காலியாகிவிடும்.எங்க ஊரு பக்கம் எல்லாம் கரும்பு கடிச்சு சாப்பிட முடியாதவங்க பக்கத்துல இருக்குற கரும்பு ஜூஸ் கடைக்கு எடுத்து போய் சாறு பிழிந்து எடுத்துக்கிட்டு வந்து குடிப்பாங்க,ஆனா எல்லா பக்கமும் அப்படி கடையில சாறு பிழிந்து  தரமாட்டாங்க அவுங்க வியாபாரம் பாதிக்கும்னு அந்த மாதிரி இடங்களில் இப்படி நாமே வீட்டுல ஈஸியாக கரும்பு ஜூஸ் செய்திடலாம்.

கரும்பு சாறு | கரும்பு ஜூஸ் | Karumbu Juice

Preparation Time : 20 mins | Cooking Time : 0 minsServes :
Recipe Category: Juice | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கரும்பு - 1/2
இஞ்சி - சிறிய துண்டு 
எலுமிச்சை பழம் - 1/2 மூடி 


செய்முறை
முதலில் கரும்பை அரிவாளால் ஒரு அடி துண்டுகளாக வெட்டி கொள்ளவும் , பின் ஒவ்வொரு துண்டுகளையும் குறுக்கே அரிவாளால் 3 ஓர் 4 பகுதியாக வகுந்து கொள்ளவும்.அடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக கையாலே ஒடித்து விடலாம்,அப்போது அப்படியே தோலை நீக்கி விடவும்.இதே போல் முழுவதற்கும் தோலை நீக்கி கரும்பை தயார் செய்து வைத்துக்கொள்ளவும். பின் இஞ்சியை தோல் சீவி மிக்ஸி ஜாரில் போடவும், அடுத்து கரும்பை போட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.அரைத்ததை ஒரு வடிகட்டியில் போட்டு ஜூஸ்-யை பிழிந்து எடுக்கவும், அப்புறம் தேவைப்பட்டளவு எலுமிச்சை பழம் பிழிந்து கொள்ளவும்.சுவையான வீட்டிலே செய்த கரும்பு சாறு/ஜூஸ் தயார். குறிப்புக்கள்:
  • சில்லென்று வேண்டுமென்றால் சிறுது நேரம் பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
  • ஐஸ் கட்டி சேர்த்தால் ஜூஸ் தண்ணிவிட்டு போய்விடும்,அதனால் சேர்க்கவேண்டாம்.
  • இஞ்சி மற்றும் லெமன் ஜூஸ் நல்ல சுவை மற்றும் மணத்தை கொடுக்கும்,விருப்பப்பட்ட அளவு சேர்த்து கொள்ளவும்.

No comments:

Post a Comment