Tuesday, May 22, 2018

குடை மிளகாய் சட்னி

ஒரே மாதிரியே சட்னி செய்து போர் அடிக்குதா ?? கொஞ்சம் வித்தியாசமாக இந்த குடை மிளகாய் சட்னி செய்து பாருங்கள். இட்லி மற்றும் தோசைக்கு சூப்பரா இருக்கும். பச்சை மற்றும் சிவப்பு குடை மிளகாய் இரண்டையும் இந்த சட்னிக்கு பயன்படுத்தலாம், இரண்டுமே நன்றாக இருக்கும். வாங்க இப்போ இந்த சட்னி எப்படி செய்வதுனு பாக்கலாம்.

Kudai milagai Chutney

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsServes : 2 to 3 
Recipe Category: Chutney | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
சிவப்பு குடை மிளகாய்  - 2(சிறியது )
கடலை பருப்பு - 2 டீஸ்பூன் 
சிவப்பு மிளகாய் - 2 
தக்காளி - 1
சின்ன வெங்காயம்  - 2
பூண்டு - 1 பல் 
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
தாளிக்க 
நல்லெண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 


செய்முறை
குடை மிளகாய் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் கடலை பருப்பு மற்றும் சிவப்பு காய்ந்த மிளகாய் போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.அடுத்து அதே கடாயில் சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கவும்.அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு மசிந்த பின் அடுப்பை அணைத்து விடவும். சிறுது நேரம் ஆறவிடவும்.முதலில் கடலை பருப்பு மற்றும் சிவப்பு காய்ந்த மிளகாயை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து கொள்ளவும். அடுத்து வதக்கி வைத்த தக்காளி, குடை மிளகாயை மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்த்து கொள்ளவும்.சுவையான குடை மிளகாய் சட்னி ரெடி.
குறிப்புக்கள் 

  • சிவப்புக்கு பதில் பச்சை குடை மிளகாயை கூட பயன்படுத்தலாம்.
  • நல்லெண்ணெய் இந்த சட்னிக்கு நல்ல மணத்தை கொடுக்கும்.
  • உங்கள் காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளவும்.

Read more »

Monday, May 21, 2018

வெங்காய சம்பல் | வெங்காய தயிர் பச்சடி | வெங்காய ரய்தா

வெங்காய சம்பல் / தயிர் பச்சடி, சுலபாக மற்றும் சீக்கரம் செய்யக்கூடிய ஒரு சைடு டிஷ். இது பிரியாணி மற்றும் புலாவ்-வுடன் சாப்பிட அருமையாக இருக்கும். எங்க வீட்டில் பிரியாணி செய்தால் இந்த வெங்காய சம்பல் சைடு டிஷ்-ஆக கண்டிப்பாக இருக்கும், பிரியாணி-க்கு மட்டுமல்ல சப்பாத்தி மற்றும் பரோட்டா-க்கு கூட  வெங்காய சம்பல் ஒரு சூப்பர் சைடு டிஷ். இந்த வெங்காய சம்பல் / தயிர் பச்சடி-யை எப்படி செய்வதுனு பாக்கலாம் வாங்க !!!

Onion raita

Preparation Time : 5 mins | Cooking Time : 0 minsServes :
Recipe Category: Side dish | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 1
தயிர் - 1/2 கப் 
உப்பு - தேவைக்கேற்ப 
கொத்தமல்லி இலை - சிறுதளவு 

செய்முறை
வெங்காயத்தை நன்கு மெலிதாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும், தேவையான அளவு உப்பு சேர்த்து,ஒரு  ஸ்பூன்-யை வைத்து நன்கு கட்டி இல்லாமல் அடித்து கொள்ளவும்.அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கிளறி கொள்ளவும். கடைசியாக பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலையை மேலே தூவவும்.சுவையான வெங்காய சம்பல் / வெங்காய தயிர் பச்சடி தயார் !!!
குறிப்புக்கள் 

  • குறைந்தது ஒரு 1/2 மணி நேரம் வெங்காயத்தை தயிரில் ஊற விடவும். 
  • புளிக்காத தயிரை பயன்படுத்தி கொள்ளவும்.
  • வெயில் காலத்தில் புளிக்காத தயிரில் பச்சடி செய்தாலும் சில நேரம் பரிமாறும் பொழுது புளித்து விட்டும், அதனை தடுக்க ஒரு 2 டேபிள் ஸ்பூன் பாலை தயிருடன் சேர்த்து கலந்து வைத்து விடவும்.2 அல்லது 3 மணி நேரம் ஆனாலும்  தயிர் பச்சடி புளிக்காமல் இருக்கும்.

Read more »

சிக்கன் பிரியாணி | கோழி பிரியாணி | பிரஷர் குக்கர் பிரியாணி

சிக்கன் பிரியாணி / கோழி பிரியாணி, எளிதாக குக்கரில் செய்யக்கூடிய சுவையான ஒரு பிரியாணி. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை பல வகையான பிரியாணி உள்ளன. தமிழ் நாட்டிலே ஆம்பூர் பிரியாணி , திண்டுக்கல் பிரியாணி அப்படினு ஒவ்வொரு ஊருக்கு ஒரு பிரியாணி பிரபலம். பாரம்பரியமான முறைப்படி செய்யப்படும் பிரியாணியில் அரிசி மற்றும்  இறைச்சி-யை தனியாக முக்கால் பதம் வேக வைத்து பின்பு இரண்டையும் ஒவ்வொரு அடுக்காக பரப்பி தம் போட்டு வேக வைப்பார்கள். அதன் ரெசிபி-யை நாம் இன்னொரு நாள் பார்க்கலாம் , இன்று சுலபமாக அதை சுவையுடன் பிரஷர் குக்கரில் சிக்கன் பிரியாணி எப்படி செய்வதுனு பாக்கலாம்.

Chicken Biryani in Pressure cooker

Preparation Time : 1 hr | Cooking Time : 30 minsServes : 2 to 3 
Recipe Category: Biryani | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கோழி - 400 கிராம்
பாஸ்மதி அரிசி - 1 கப்  
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு  - 1 டீஸ்பூன் 
புதினா  மற்றும் கொத்தமல்லி  - ஒரு கைப்பிடி 
முந்திரி பருப்பு - 5
பட்டை - 1/2 அங்குல துண்டு 
கிராம்பு - 5
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பில்லை - 1 கொத்து 
நெய் - 1 & 1/2 டீஸ்பூன் 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப 
சிக்கன்  ஊற வைக்க 
தயிர் - 3 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
உப்பு - சிக்கன் தேவையான அளவு

செய்முறை
முதலில் சிக்கன்-யை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். அதில் சிக்கன்  ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக  சேர்க்கவும்.மசாலாவில் சிக்கன்-யை நன்கு விரைவி ஒரு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.அரிசி-யை ஒரு 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை மெலிதாக, தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்து கொள்ளவும். தேவையான புதினா மற்றும் கொத்தமல்லியை சுத்தப்படுத்தி எடுத்து வைக்கவும்.அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி கொள்ளவும். நெய் சூடான பின் பட்டை,கிராம்பு ,ஏலக்காய் மற்றும் பிரியாணி இலையை சேர்த்து ஒரு 30 நொடி வதக்கவும். பின் முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளவும்.முந்திரி பருப்பு பொன்னிறமாக ஆனபின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனபின் தக்காளி சேர்க்கவும்.அடுத்து ஊற வைத்த சிக்கன் மற்றும் புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு ஒரு 10 நிமிடம் வதக்கவும்.இதற்கிடையில் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும். இன்னொரு அடுப்பில் 2 கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்தபின் அதையெடுத்து சிக்கனில் ஊற்றவும்.சாதத்திற்கு தேவையான உப்பு மட்டும் சேர்க்கவும். ஏற்கனவே சிக்கன்-கு நாம் உப்பு சேர்த்து விட்டோம்.அரிசி சிக்கன்-வுடன் சேர்த்து மெதுவாக கிளறி விடவும். கடைசியாக எலுமிச்சை சாறை விடவும்.தண்ணீர் நன்கு கொதித்த பின் குக்கரை மூடி 3 விசில் வேகவைக்கும். சுவையான சிக்கன் பிரியாணி தயார்!!. வெங்காய சம்பல் மற்றும் அவித்த முட்டையுடன் பரிமாறவும்.
குறிப்புக்கள் 

  • அரிசி ஒரு பங்கு என்றால் தண்ணீர் இரண்டு பங்கு , அதுபோல அரிசியை கண்டிப்பாக ஒரு 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • சிக்கன்-யை குக்கரில் சேர்த்த பின் ஒரு 10 நிமிடம் தண்ணீர் ஊற்றாமல் சிக்கன் மற்றும் தயிரில் உள்ள நீரில் வேகவிடுவது சுவையை கூட்டும்.
  • புளிக்காத தயிரை பயன்படுத்தி கொள்ளவும்.
  • தேவைப்பட்டால் 1 டீஸ்பூன் நெய்யை கடைசியாக பரிமாறும் முன் ஊற்றி கிளறி கொள்ளவும். இன்னும் சுவையை நன்றாக இருக்கும்.



Read more »

Friday, May 18, 2018

உதிரி உதிரியாக பாசுமதி அரிசியை சமைப்பது எப்படி??

இப்போ தான் சமையல் செய்து பழகுறீங்கனா,பாசுமதி அரிசியை உதிரி உதிரியாக சமைப்பது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். சரியாக வேகவில்லை அல்லது குலைந்து போய்விட்டது என்றாலும் சாப்பிட நல்லாயிருக்காது. பல முறை குக்கர் மற்றும் திறந்த பானையில் பாசுமதி அரிசியை சமைத்து பார்த்ததில், திறந்த பானையில் தான் ரொம்ப சூப்பரா உதிரி உதிரியாக  வந்தது, அதனால் நான் எப்பொழுது எல்லாம் பாசுமதி அரிசியை மட்டும் திறந்த பானையில் தான் வடிப்பது. உங்களுக்கும் பாசுமதி அரிசியை உதிரி உதிரியாக சமைப்பது சவாலாக இருந்தால் இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்கள்.

How to cook Basmati Rice

Preparation Time : 30 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Roce | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப் 
தண்ணீர் - 2 கப் 
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை
பாசுமதி அரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிவர விடவும். அதில் உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்க்கவும்.பின்பு ஊறவைத்த அரிசியில் தண்ணீரை வடித்து அரிசியை மட்டும் கொதிக்கும் தண்ணீரில் போடவும்.அரிசி கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயை மெலிதாக வைத்து ஒரு மூடியால் பாத்திரத்தை மூடவும்.7-9 நிமிடத்தில் அரிசி நன்கு வெந்து தண்ணீர் வற்றியிருக்கும். அப்போது தீயை அணைத்து விடவும்,ஆனால் மூடியை திறக்காமல் ஒரு 10 நிமிடம் அப்படியே விடவும். 10 நிமிடம் ஆன பின் லேசாக ஒரு போர்க்-யை கொண்டு கிளறி விடவும்.சூப்பரா உதிரி உதிரியாக பாசுமதி அரிசியில் செய்த சாதம் தயார்.
குறிப்புக்கள் 

  • நல்லெண்ணெய் சேர்ப்பதால் சாதம் ஒட்டாமல் வரும்.
  • அடிக்கடி கிளறினால் அரிசி உடைந்து சாதம் சீக்கரம் குலைந்து விடும்.
  • உப்பு சேர்க்காமலும் சாதம் வேகவைத்து கொள்ளலாம்.
  • தண்ணீர் முழுவதும் வற்றிவிட்டதா என்று பார்த்துவிட்டு தீயை அணைக்கவும்.

Read more »

தேங்காய் சாதம்

தேங்காய் சாதம், நொடியில் செய்யக்கூடிய ஒரு சுவையான கலவை சாதம். வேகவைத்த சாதம் மட்டும் இருந்தால், தாளிக்குறது மட்டும் தான் வேலை, ஐந்து நிமிடத்தில் இந்த தேங்காய் சாதத்தை செய்துவிடலாம். காலை அவசரத்திற்கு எளிதாக செய்து கொடுக்கக்கூடிய  ஒரு டிபன் பாஸ் ரெசிபி இது.வாங்க இப்போ இதை எப்படி செய்றதுனு பாக்கலாம்.

Coconut Rice

Preparation Time : 5 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Rice | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வேகவைத்த சாதம் - 1 & 1/2 கப் 
துருவிய தேங்காய் - 1/2 கப் 
இஞ்சி - 1/2 அங்குலம் துண்டு 
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/2  டீ ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன்
வேர்க்கடலை - 1&1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து 

செய்முறை
வெங்காயம் மற்றும் இஞ்சியை  தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை பாதியாக வகுந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் கடுகு மற்றும் உளுந்து தாளித்து கொள்ளவும், அடுத்ததாக கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம், இஞ்சி,பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்க்கவும், வெங்காயம் வதங்கிய பின் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.தேங்காயை ஒரு இரண்டு நிமிடம் வதக்கிய பின், சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.சூப்பரா நொடியில் செய்த சுவையான தேங்காய் சாதம் தயார்.
குறிப்புக்கள் 

  • விருப்பப்பட்டால் முந்திரிப்பருப்பு கூட சேர்த்து கொள்ளலாம்.
  • தேவைக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.
  • மிதமாகி போன சாதத்தில் கூட இதை செய்யலாம்.



Read more »

Thursday, May 17, 2018

பலாக்கொட்டை பொரியல்

கோடைக்காலத்தில் கிடைக்கும் சுவையான பழங்களில் ஒன்று பலாப்பழம். நிறைய பேருக்கு பலாக்கொட்டையை சாப்பிடலாம் என்று தெரியாமல் பலாப்பழம் சாப்பிட பின் கொட்டையை தூர போட்டுவிடுவார்கள்.அனால் பலாக்கொட்டை அப்படியே வேகவைத்தும் சாப்பிடலாம் அல்லது இந்த மாதிரி பொரியல் செய்து சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சூப்பரா இருக்கும் இந்த பலாக்கொட்டை பொரியலை நிமிடத்தில் செய்துவிடலாம் ,வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்ப்போம்.

Jackfruit Seed Poriyal

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பலாக்கொட்டை - 1 & 1/2 கப் 
வெங்காயம் - 1(சின்னது )
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை 
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்  
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து

செய்முறை
முதலில் பலாக்கொட்டை தோலை நீக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.ஒரு பிரஷர் குக்கரில் பலாக்கொட்டை போட்டு முழுகும் வரை தண்ணீர் ஊற்றி , உப்பு சேர்த்து 3 விசில் வேகவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்அடுத்து வெங்காயம் மற்றும் பலாக்கொட்டையை பொடியாக நறுக்கி கொள்ளவும்,ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை போட்டு நன்கு சிவக்க வதக்கிக்கொள்ளவும்.பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.அதனுடன் பலாக்கொட்டையை சேர்த்து மசாலாவில் நன்கு பிரட்டி எடுக்கவும். 5-7 நிமிடங்கள் மெல்லிய தீயில் வதக்கவும். கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்சுவையான பலாக்கொட்டை பொரியல் தயார்!!!
குறிப்புக்கள் 

  • வேகவைத்த பின் பலாக்கொட்டை தோல் நீக்குவது கடினமாக இருக்கும். அதனால் முதலே தோலை நீக்கி விடவும்.
  • பலாக்கொட்டையில் லேசாக இனிப்பு இருக்கும், அதனால் கொஞ்சம் கூடுதல் மிளகாய் பொடி சேர்த்து கொண்டால் சுவை நன்றாக இருக்கும்.
  • இதனை சாயந்தரம் ஸ்னாக்ஸ்-ஆக கூட பரிமாறலாம்.

Read more »