Monday, April 8, 2019

பன்னீர் சோடா | ரோஸ் சோடா

பன்னீர் சோடா , ரொம்ப சுவையான மற்றும் மணமான குளிர்பானம். உங்களுக்கு கடையில் கிடைக்கும் பன்னீர் சோடா பிடிக்குமென்றால் ஒரு தடவை இதனை வீட்டிலே செய்து பாருங்கள் அப்புறம் நீங்க கடையில் வாங்குவதே விட்டுவிடுவீர்கள்,அவ்வளவு ஈஸியாக நொடியில் வீட்டிலே செய்துவிடலாம்.வாங்க எப்போ இந்த பன்னீர் சோடா எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பன்னீர் சோடா | ரோஸ் சோடா

Preparation Time : 20 mins | Cooking Time : 5 minsServes :
Recipe Category: Drinks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ரோஸ் எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப் 
தண்ணீர் - 1/2 கப் 
சோடா - தேவையானளவு 
ஐஸ் கட்டிகள் - தேவையானளவு 


செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும்.பின் அடுப்பை அணைத்து விட்டு ரோஸ் எசென்ஸ்யை சேர்த்து நன்கு ஆற விடவும் . அவ்வளவு தான், ரோஸ் சிரப் தயார். இதனை தேவையானளவு டம்ளரில் ஊற்றி கொள்ளவும்.பின் அதில் சோடா மற்றும் ஐஸ் கட்டி சேர்த்து உடனே பரிமாறவும்.சுவையான மற்றும் புத்துணர்ச்சி தர கூடிய பன்னீர் சோடா தயார்.
குறிப்புக்கள் 

  • ரோஸ் சிரப்-யை முன்னாடியே செய்து பிரிட்ஜில் வைத்து கொள்ளலாம்,தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தி கொள்ளவும்.
  • உங்கள் தேவைக்கேற்ப ரோஸ் எசென்ஸ் கூடவோ அல்லது குறையவோ பயன்படுத்தி கொள்ளவும்.

No comments:

Post a Comment