Showing posts with label பாசுமதி அரிசி. Show all posts
Showing posts with label பாசுமதி அரிசி. Show all posts

Friday, May 18, 2018

உதிரி உதிரியாக பாசுமதி அரிசியை சமைப்பது எப்படி??

இப்போ தான் சமையல் செய்து பழகுறீங்கனா,பாசுமதி அரிசியை உதிரி உதிரியாக சமைப்பது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். சரியாக வேகவில்லை அல்லது குலைந்து போய்விட்டது என்றாலும் சாப்பிட நல்லாயிருக்காது. பல முறை குக்கர் மற்றும் திறந்த பானையில் பாசுமதி அரிசியை சமைத்து பார்த்ததில், திறந்த பானையில் தான் ரொம்ப சூப்பரா உதிரி உதிரியாக  வந்தது, அதனால் நான் எப்பொழுது எல்லாம் பாசுமதி அரிசியை மட்டும் திறந்த பானையில் தான் வடிப்பது. உங்களுக்கும் பாசுமதி அரிசியை உதிரி உதிரியாக சமைப்பது சவாலாக இருந்தால் இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்கள்.

How to cook Basmati Rice

Preparation Time : 30 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Roce | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப் 
தண்ணீர் - 2 கப் 
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை
பாசுமதி அரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிவர விடவும். அதில் உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்க்கவும்.பின்பு ஊறவைத்த அரிசியில் தண்ணீரை வடித்து அரிசியை மட்டும் கொதிக்கும் தண்ணீரில் போடவும்.அரிசி கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயை மெலிதாக வைத்து ஒரு மூடியால் பாத்திரத்தை மூடவும்.7-9 நிமிடத்தில் அரிசி நன்கு வெந்து தண்ணீர் வற்றியிருக்கும். அப்போது தீயை அணைத்து விடவும்,ஆனால் மூடியை திறக்காமல் ஒரு 10 நிமிடம் அப்படியே விடவும். 10 நிமிடம் ஆன பின் லேசாக ஒரு போர்க்-யை கொண்டு கிளறி விடவும்.சூப்பரா உதிரி உதிரியாக பாசுமதி அரிசியில் செய்த சாதம் தயார்.
குறிப்புக்கள் 

  • நல்லெண்ணெய் சேர்ப்பதால் சாதம் ஒட்டாமல் வரும்.
  • அடிக்கடி கிளறினால் அரிசி உடைந்து சாதம் சீக்கரம் குலைந்து விடும்.
  • உப்பு சேர்க்காமலும் சாதம் வேகவைத்து கொள்ளலாம்.
  • தண்ணீர் முழுவதும் வற்றிவிட்டதா என்று பார்த்துவிட்டு தீயை அணைக்கவும்.

Read more »