Monday, June 25, 2018

மஷ்ரூம் பிரியாணி | காளான் பிரியாணி | Mushroom Biryani

மஷ்ரூம்/காளான் பிரியாணி, சுவையான எளிதில் பிரஷர் குக்கரில் செய்யக்கூடிய ஒரு பிரியாணி. ஒரு 20-25 நிமிடத்தில் செய்யக்கூடிய பிரியாணி இது, அதனால் இந்த பிரியாணி-யை  ரொம்ப ஈஸியாக லஞ்ச் பாஸ்-க்கு  செய்து கொடுத்திடலாம். சைடு டிஷ் என்றும் பெருசாக இந்த பிரியாணிக்கு எதும் தேவையில்லை சிம்பிளா ஒரு தயிர் பச்சடி இருந்தாலே போதும், சூப்பரா இருக்கும். வாங்க இப்போ இந்த சூப்பர் மஷ்ரூம்/காளான் பிரியாணி-யை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

மஷ்ரூம் பிரியாணி | காளான் பிரியாணி | Mushroom Biryani

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Biryani | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மஷ்ரூம்/காளான்  - 200 கிராம்
பாஸ்மதி அரிசி - 1/2 கப்  
வெங்காயம் - 1/2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
புதினா  மற்றும் கொத்தமல்லி  - ஒரு கைப்பிடி 
முந்திரி பருப்பு - 5
பட்டை - 1/2 அங்குல துண்டு 
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
நெய் - 1 & 1/2 டீஸ்பூன்  
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
அரிசி-யை ஒரு 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் மஷ்ரூம்-யை  மெலிதாக, தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்து கொள்ளவும். தேவையான புதினா மற்றும் கொத்தமல்லியை சுத்தப்படுத்தி எடுத்து வைக்கவும்.அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து  நெய் ஊற்றி கொள்ளவும். நெய் சூடான பின் பட்டை,கிராம்பு ,ஏலக்காய் மற்றும் பிரியாணி இலையை சேர்த்து ஒரு 30 நொடி வதக்கவும். பின் முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளவும்.முந்திரி பருப்பு பொன்னிறமாக ஆனபின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனபின் அடுத்து தக்காளி,மஷ்ரூம் மற்றும் புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு ஒரு 2 நிமிடம் வதக்கவும்.வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் , உப்பு மற்றும் தயிர் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும்.அடுத்து தண்ணீரை ஊற்றி அது கொதி வந்த பின் அதில் ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும்.குக்கரை மூடி 3 விசில் வேகவிடவும்.சுவையான மஷ்ரூம் பிரியாணி தயார்.
 குறிப்புக்கள்:
  • ப்ரவுன் மற்றும் வெள்ளை எந்த மஷ்ரூம் என்றாலும் பயன்படுத்தலாம்.
  • நெய்க்கு பதிலாக எண்ணெயும் பயன்படுத்தலாம் அல்லது பாதி நெய் பாதி எண்ணெயும் பயன்படுத்தலாம்.
  • தேவைப்பட்டால் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கொள்ளலாம்.

Read more »

Thursday, June 21, 2018

காலிபிளவர் 65 | Cauliflower 65

காலிபிளவர் 65, மொறுமொறுப்பான இந்த காலிபிளவர் ஸ்னாக்ஸ் கடையில் கிடைப்பதை போலவே  நம் வீட்டில் ரொம்ப ஈசியாக செய்யலாம். இதை சாதமுடன் சைடு டிஷாக அல்லது ஸ்னாக்ஸ்-ஆகா கூட பரிமாறலாம். எப்படியென்றாலும்  ரொம்ப சுவையாக இருக்கும்.இதற்கு முன்னாடி காலிபிளவர் 65 நீங்க ட்ரை பண்ணி அது எண்ணெயை ரொம்ப குடிச்சு மொறுமொறுவென்று வராத அநுபவம் உங்களுக்கு இருந்துச்சுன்னா,உங்களுக்கு இந்த ரெசிபி ரொம்ப உதவியாக இருக்கும், ஏனென்றால் எனக்கும் அப்படி தான் ஆரம்பத்தில் வந்தது,அப்புறம் ரெசிபியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி பெர்பெக்ட் காலிபிளவர் 65 செய்வது எப்படினு தெரிஞ்சுகிட்டேன்.வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம். 

காலிபிளவர் 65 | Cauliflower 65

Preparation Time : 30 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
காலிபிளவர் - 1 & 1/2 கப் 
தயிர்  -1/4 கப் 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்  
கரம் மசாலா தூள் -1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
சிவப்பு கலர் - 1 சிட்டிகை 
லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன் 
சோள மாவு - 3-4 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையானளவு 


செய்முறை
முதலில் காலிபிளவர்-யை சிறு சிறு துண்டுகளாக எடுத்து நன்கு கழுவி தண்ணீரில்லாமல் ஒரு கிட்சன் பேப்பரில் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தயிர்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு,இஞ்சி பூண்டு விழுது,சிவப்பு கலர்  மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.அதில் காலிபிளவர்-யை போட்டு நன்கு  கலந்து ஒரு 1/2 மணி நேரம் ஊற விடவும்.பொரிப்பதற்கு முன் சோள மாவை காலிபிளவர்-வுடன்  சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை காய வைத்து, காலிபிளவர்-யை போட்டு நன்கு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.கடைசியாக கறிவேப்பில்லை-யை எண்ணெயையில் பொரித்து காலிபிளவர்-வுடன் கலந்து கொள்ளவும்.சுவையான காலிபிளவர் 65 தயார்.
குறிப்புக்கள்:

  • நன்கு கெட்டியான தயிரை பயன்படுத்தவும்.
  • முதலில் 3 டேபிள் ஸ்பூன் சோள மாவை காலிபிளவர்-வுடன் சேர்த்து பொரித்து பார்க்கவும். நல்ல கிரிஸ்பாக வரவில்லை என்றால் கூட  1 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து கொள்ளவும்.


Read more »

Tuesday, June 19, 2018

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் | Strawberry Milkshake/Smoothie

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் , சுலபாக செய்யக்கூடிய ஒரு சுவையான ஸ்மூத்தி/மில்க் ஷேக். இந்த மில்க் ஷேக் செய்வதற்கு மொத்தமே 3 பொருட்கள் ஸ்ட்ராபெர்ரி,பால் மற்றும் தேன்/சர்க்கரை ஆகியவை தான் தேவை.எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸில் அடித்ததால் போதும், உங்கள் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் நொடியில் தயார். தேவைப்பட்டால் ஒரு ஸ்கூப் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்,அது இன்னும் சுவையை கூட்டும். வாங்க எப்போ இந்த  ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் | Strawberry Milkshake/Smoothie

Preparation Time : 5 mins | Cooking Time : 0 minsServes :
Recipe Category: Drinks | Recipe Cuisine: International
தேவையான பொருட்கள்
ஸ்ட்ராபெர்ரி - 100கிராம் 
பால் - 1/2 - 3/4 கப் 
தேன் - தேவைக்கேற்ப 


செய்முறை
முதலில் ஸ்ட்ராபெர்ரி-யை நன்கு கழுவி,சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, பாலையும் சேர்க்கவும்.அடுத்து தேவையானளவு தேனை சேர்த்து மிக்ஸில் நன்கு அடித்து கொள்ளவும்.அவ்வளவுதான் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் தயார்.
குறிப்புக்கள் :
  • ஸ்மூத்தி திக்காக வேண்டுமென்றால் 1/2 கப் பால்  சேர்க்கவும் இல்லையெனில் 3/4 கப் பால் சேர்த்து கொள்ளவும்.
  • சூடு பண்ணி நன்கு ஆறவைத்த பாலை பயன்படுத்தவும்.
  • தேனுக்கு பதில் சர்க்கரையும் சேர்க்கலாம்.

Read more »

Monday, June 18, 2018

தக்காளி தொக்கு | Tomato Thokku

தக்காளி தொக்கு, சுவையான இந்த தொக்கு இட்லி,தோசை,சப்பாத்தி மற்றும் சாதம் எப்படி எதனுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். தக்காளி மலிவாக கிடைக்கும் சமயங்களில் இதை செய்து வைத்துக்கொண்டால் வார கணக்கில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி இந்த தக்காளி தொக்கு பயணங்களில் எடுத்து செல்ல ஒரு சிறந்த உணவு, சீக்கரம் கெட்டுப்போகாமல் நன்றாக இருக்கும்.வாங்க இப்போ இந்த சுவையான தொக்கை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
வீடியோ ரெசிபிக்கு  கீழே பார்க்கவும்.



தக்காளி தொக்கு | Tomato Thokku

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsMakes : 1 cup 
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
தக்காளி - 4
பூண்டு - 6
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
வெல்லம் - 1 டீஸ்பூன் 
வெந்தய பொடி  -1/4 டீஸ்பூன் 


செய்முறை
முதலில் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து பூண்டை தோல் உரித்து எடுத்து  கொள்ளவும். பூண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை மட்டும் போட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் கடுகை தாளித்து கொள்ளவும். அடுத்து பூண்டு மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து கொள்ளவும்.பூண்டு நன்கு வதங்கிய பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து கொள்ளவும்.கூடவே மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.நன்கு கொதி வந்த பின் மூடி வைத்து மெல்லிய தீயில் சுருள வரும் வரை விடவும். இடையில் அடிபிடிக்காமலிருக்க அடிக்கடி கிளறி கொள்ளவும்.கடைசியாக வெல்லம் மற்றும் வெந்தய தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை தொக்கை வதக்கவும்.சுவையான தக்காளி தொக்கு தயார்.
குறிப்புக்கள் 

  • சிறிய பூண்டாக இருந்தால் நறுக்காமல் அப்படியே போட்டு கொள்ளலாம்.
  • பிரிட்ஜ்-ல் 2 வாரம் வரை இந்த தொக்கை வைத்து கொள்ளலாம்.

Read more »

Saturday, June 16, 2018

முட்டை பொரியல்/பொடிமாஸ் | Egg Podimas | Egg Poriyal

முட்டை பொரியல்/பொடிமாஸ் , எளிதாக மற்றும் சீக்கரம் செய்யக்கூடிய ஒரு சைடு டிஷ். இது சாதம் மற்றும் சப்பாத்திக்கு ரொம்ப நன்றாக இருக்கும்.பொதுவாக முட்டை பொடிமாஸ் செய்யும் பொது வெறும் வெங்காயம் மட்டும் சேர்த்து செய்வாங்க, அதனுடன் கொஞ்சம் தக்காளியும் சேர்த்து செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும்.வாங்க இப்போ இந்த சூப்பர் முட்டை பொடிமாஸ் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

முட்டை பொரியல்/பொடிமாஸ் | Egg Podimas | Egg Poriyal

Preparation Time : 5 mins | Cooking Time : 5 minsServes :
Recipe Category: Side Dish | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
முட்டை - 2 
வெங்காயம் - 1(சிறியது )
தக்காளி - 1(சிறியது)
பச்சை மிளகாய் - 1 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - 1/2 ட்ஸ்ப் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை & கொத்தமல்லி இலை - சிறிதளவு 


செய்முறை
முதலில் வெங்காயம்,தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி கொள்ளவும் . ஒரு வாணலிலில் எண்ணெயை சூடு பண்ணி கடுகு மற்றும் உளுந்த பருப்பை தாளித்து கொள்ளவும்.அடுத்து வாணலிலில் வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கிய பின் தக்காளி சேர்க்கவும், கூடவே மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் மசாலாவுக்கு தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.அனைத்தையும் நன்கு வதக்கவும், தக்காளி நன்கு வதங்கிய பின் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.இப்போது முட்டைக்கு தேவையானளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.முட்டை நன்கு வெந்த பின் கரண்டியை கொண்டு முட்டையை பொடியாக கொத்திக்கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.சுவையான முட்டை பொடிமாஸ் தயார்.
குறிப்புக்கள் 

  • தேவைப்பட்டால் 1/4 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கொள்ளலாம்.
  • முட்டை வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். முட்டை அதிக நேரம் வெந்தால் ரப்பர் மாதிரி ஆகிவிடும்.



Read more »

Thursday, June 14, 2018

கருப்பட்டி காபி | Karupatti Kapi

கருப்பட்டி காபி , சீனிக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் இந்த காபி நமது பாரம்பரிய ரெசிப்பிகளில் ஒன்று. பொதுவாகவே சர்க்கரை விட கருப்பட்டி, வெல்லம் போன்றவை உடலுக்கு ரொம்ப நல்லது.அதுமட்டுமின்றி கருப்பட்டி காபிக்கு தனியொரு சுவை மற்றும் மணத்தையும் கொடுக்கும் . சர்க்கரை சேர்த்து செய்யப்படும் காபியை விட ரொம்ப நன்றாக இருக்கும். நீங்க இது வரை இந்த காபியை செய்தது இல்லையென்றால் கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க, அப்போது தான் நான் சொல்றது சரினு நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.வாங்க இப்போ இந்த கருப்பட்டி காபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். 

கருப்பட்டி காபி | Karupatti Kapi

Preparation Time : 5 mins | Cooking Time : 5 minsServes :
Recipe Category: Coffee | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கருப்பட்டி - 1/4 கப் 
தண்ணீர் - 2 கப் 
காபி பொடி - 1 & 1/4 டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் கருப்பட்டியை லேசாக தட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட  வேண்டும்.தண்ணீர் நன்கு கொதி வந்த பின் காபி பொடியை அதில் சேர்த்து ஒரு 2 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு அதில் கருப்பட்டியை சேர்க்கவும்.கருப்பட்டி முழுவதும் கரைந்த பின் அடுப்பை அணைத்துவிட்டு காபியை வடிகட்டவும்.சுவையான கருப்பட்டி காபி தயார்.
குறிப்புக்கள் 

  • உங்கள் சுவைக்கு ஏற்ப கருப்பட்டியை கூடவோ அல்லது குறைத்தோ சேர்த்து கொள்ளவும் 
  • நீங்கள் விருப்பபட்டால் இதில் பால் கூட சேர்த்து கொள்ளலாம்.

Read more »