Thursday, November 22, 2018

பொரி உருண்டை | Pori Urundai

பொரி உருண்டை, சுலபமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம். பெரும்பாலும் இதனை கார்த்திகை தீபம் பண்டிகைக்கு செய்வார்கள், நாளை  கார்த்திகை தீபம்  சுலபமாக செய்யக்கூடிய இந்த பொரி உருண்டையை நீங்களும் செய்து பாருங்கள். இதனை செய்வது ரொம்ப சுலபம், வெல்ல பாகு செய்வது தான் வேலை, மற்றபடி சற்றென்று செய்துவிடலாம்,வாங்க இப்போ பொரி உருண்டை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பொரி உருண்டை | Pori Urundai

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsMakes : 10 
Recipe Category: Snack | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பொரி - 2 கப் 
வெல்லம் - 1/2 கப் 
சுக்கு பொடி - 1/4 டீஸ்பூன் 
தண்ணீர்  - தேவையானளவு 
நெய் - சிறுதளவு 


செய்முறை
முதலில் வெல்லத்தை சிறிதாக பொடித்து ஒரு வாணலில் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் கரைந்த பின் ஒரு முறை வடிகட்டி மீண்டும் அதனை கொதிக்க விடவும்.கூடவே சிறுது சுக்கு பொடி சேர்த்துக்கொள்ளவும் வெல்லம் உருட்டும் பதம்(சிறுதளவு வெல்ல பாகை எடுத்து தண்ணீரில் ஊற்றவும், பாகு கரையாமல் கையில் எடுத்து உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும் ) வந்த பின் அடுப்பை அனைத்து உடனே பொரியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.கையில் லேசாக நெய் தடவி பொரியை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.சுவையான பொரி உருண்டை தயார்.குறிப்புக்கள் 
  • சுக்கு பொடிக்கு பதில் ஏலக்காய் பொடி கூட சேர்க்கலாம்.
  • பொரி லேசாக சூடாக இருக்கும் போதே உருண்டை பிடித்து விடவும், ஆறியபின் உருண்டை பிடிக்க முடியாது.



No comments:

Post a Comment