Tuesday, November 20, 2018

ஓட்ஸ் உப்புமா | Oats Upma

ஓட்ஸ் உப்புமா, சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சூப்பர் சிற்றுண்டி. முதலில் எனக்கு அவ்வளவாக இந்த ஓட்ஸ் உப்புமா பிடிக்காது, எப்போது செய்தாலும்  கொஞ்சம் குழைந்து போய்விடும்,எனக்கு உப்புமாவே கொஞ்சம் உதிரியாக இருந்தால் தான் பிடிக்கும். அப்புறம் உதிரியாக செய்றது எப்படினு தெரிந்தபின் இப்போ இதனை அடிக்கடி செய்றேன், ரொம்ப சுவையாகவும் இருக்கு. வாங்க இந்த சத்தான ஓட்ஸ் உப்புமா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

ஓட்ஸ் உப்புமா | Oats Upma

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Breakfast | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப் 
வெங்காயம் - 1/2
தண்ணீர் - 1/2 கப் 
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் 
சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
கொத்தமல்லி இலை - சிறிதளவு 
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை
முதலில் வெங்காயத்தை  பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் காய வைத்து கடுகு உளுந்து தாளித்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் ஓட்ஸ்  சேர்த்து கொள்ளவும்.பின் மஞ்சள்,மிளகாய் சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து 1/2 கப் தண்ணீரை ஓட்ஸ் முழுவதும் படும்படி சிறுசிறுதாக ஊற்றி கலந்து கொள்ளவும்.அடுப்பில் தீயை சிறிதாக வைத்து ஒரு மூடி போட்டு நன்கு ஓட்ஸ்-யை வேகவிடவும். அடிபிடிக்காமலிருக்க அடிக்கடி கிளறி கொள்ளவும். சுவையான மற்றும் சத்தான ஓட்ஸ் தயார். பரிமாறும் போது சிறுது கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளவும்.
குறிப்புக்கள்

  • ஓட்ஸ் உப்புமா நன்கு குழைய வேண்டுமென்றால் மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  • 1/2 கப் தண்ணீரை நன்கு அனைத்து ஓட்ஸிலும் படும்படி சேர்த்து கொள்ளவும், அப்போது தான் ஓட்ஸ் நன்கு வெந்து மிருதுவாக இருக்கும்.

No comments:

Post a Comment