Friday, November 16, 2018

கல்யாண ரசம் | மைசூர் ரசம் | Kalyana Rasam

கல்யாண ரசம்/மைசூர் ரசம், ரொம்ப சுவையான ஒரு ரசம் வகை. கல்யாண வீடுகளில் செய்யப்படும் இந்த ரசத்தின் சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும்.உங்களுக்கு கல்யாண வீட்டு ரசம் பிடிக்குமென்றால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள். சாதத்துடன் இந்த ரசம் மற்றும் ஒரு அப்பளம் இருந்தால் கூட போதும் அட்டகாசமான சாப்பாடு தயார்.வாங்க எப்போ இந்த கல்யாண ரசம் எப்படி செய்வதுனு பார்க்கலாம். 

கல்யாண ரசம் | மைசூர் ரசம்| Kalyana Rasam

Preparation Time : 30 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Rasam | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 
தக்காளி - 1 
புளி - ஒரு எலுமிச்சை அளவு 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
பெருங்காயத்தூள் - 1/8 டீஸ்பூன் 
நெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
கொத்தமல்லி - சிறுதளவு 
வறுத்து பொடி செய்து கொள்ள தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகு - 1 & 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 


செய்முறை
முதலில் புளியை ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும், பின் வறுத்து கொள்ள வேண்டிய பொருட்களை நன்கு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.அதனை சிறுது நேரம் ஆற விட்டு நன்கு நைசாக பொடித்து கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்,அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடு பண்ணி அதில் கடுகு மற்றும் கறிவேப்பில்லை தாளித்து கொள்ளவும் ,பின் பொடியாக நறுக்கிய தக்காளி பழத்தை அதில் சேர்க்கவும் ஒரு நிமிடம் வதக்கவும்.அடுத்து ஊற வைத்த புளியிலிருந்து புளி கரைசல் எடுத்து அதில் சேர்க்கவும்,பின் வேகவைத்த பருப்பு மற்றும் பொடித்த பொடியை சேர்க்கவும்.அடுத்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் பெருங்காத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.ஒரு 5-8 நிமிடம் கொதித்த பின்,அதில் கொத்தமல்லி தழை  சேர்த்து இறக்கவும்.சுவையான மற்றும் மணமான ரசம் தயார்.
குறிப்புக்கள் 
  • கரம் அதிகமாக வேண்டுமென்றால் தாளிக்கும் போது  2 காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளவும்.
  • நெய்  இந்த ரசத்துக்கு நல்ல மணத்தை கொடுக்கும்.

No comments:

Post a Comment