சுசியம், கடலை பருப்பு கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரியமான தீபாவளி பலகாரம். முறுக்கு மற்ற இனிப்பு வகைகள் எல்லாம் தீபாவளிக்கு முன்னமே செய்தாலும், இந்த சுசியும் மற்றும் வடை வகைகளை தீபாவளி அன்று காலையில் தான் செய்து சாமிக்கு படைத்தது பின் சாப்பிடும் பழக்கம் அநேக இடங்களில் இன்றும் உள்ளது. அத்தகைய பாரம்பரியமான சுசியம் எப்படி செய்வதுனு இப்போ பார்க்கலாம்.
செய்முறை
சுசியம் | சுசியம் செய்முறை | Susiyam
Preparation Time : 1 hr | Cooking Time : 30 mins | Makes : 15
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பூர்ணத்துக்கு தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
வெல்லம் - 1/2 கப்
மேல் மாவிற்கு தேவையான பொருட்கள்
மைதா - 1/2 கப்
உப்பு - 1/8 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையானளவு
பூர்ணத்துக்கு தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
வெல்லம் - 1/2 கப்
மேல் மாவிற்கு தேவையான பொருட்கள்
மைதா - 1/2 கப்
உப்பு - 1/8 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையானளவு
செய்முறை
முதலில் கடலை பருப்பை ஒரு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் கடலைப்பருப்பை சேர்த்து வேகவிடவும்.கடலை பருப்பை எடுத்து விரல்களில் இடையே வைத்து அழுத்தினால் மைய வேண்டும், அந்த பதத்தில் கடலை பருப்பை அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை வடித்து நன்கு ஒரு துணியில்/அல்லது tissue பேப்பர்-ல் உலர விடவும்.கடலை பருப்பு லேசாக உலர்ந்த பின் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து கொள்ளவும்.பின் ஒரு கடாயில் வெல்லம் மற்றும் அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்.பொடித்த ஏலக்காயை அதில் சேர்த்து கொள்ளவும்.அடுத்து அதில் பொடித்த கடலைப்பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.பூர்ணம் நன்கு கெட்டியாக வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆறியபின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.இப்போது மேல் மாவுக்கு தேவையான மைதா மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும், அதில் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மாவை கெட்டியாக கரைத்து கொள்ளவும்.அடுத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை காய வைத்து கொள்ளவும்.பின் ஒவ்வொரு கடலை பருப்பு உருண்டைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.இரண்டு பக்கமும் வெந்த பின் எண்ணெயிலிருந்து எடுத்து ஒரு tissue பேப்பரில் போட்டு கொள்ளவும்.சுவையான சுசியம் தயார்.
குறிப்புக்கள்
No comments:
Post a Comment