Tuesday, December 4, 2018

பருப்பு பொடி | Dal Powder

பருப்பு பொடி, சுவையான இந்த பருப்பு பொடி சாதத்தில் போட்டு சாப்பிட நன்றாக இருக்கும். ஆந்திரா உணவகங்களில்  பருப்பு பொடி மற்றும் நெய் கண்டிப்பாக இருக்கும், அப்படி சாப்பிட்டு தான் இந்த  பருப்பு பொடி எனக்கு அறிமுகம் ஆனது. பருப்பு பொடிகள் செய்முறை ஒவ்வொரு இடத்துக்கு ஏற்ப மாறுபடும்,சில இடங்களில் வெறும் துவரம் பருப்பை மட்டும் பயன்படுத்தி செய்வார்கள்,ஆனால் இன்று நான் ஷேர் பண்ணும் ரெசிபியில் மூன்று வகையான பருப்புகளை பயன்படுத்தியுள்ளேன்,சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும்.உங்களுக்கும் உணவகங்களில் தரும்  பருப்பு பொடி பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள்,ரொம்ப நன்றாக இருக்கும்.

பருப்பு பொடி | Dal Powder

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1/4 கப் 
முழு உளுந்து - 2 டேபிள் ஸ்பூன் 
பாசி பருப்பு  - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 


செய்முறை
தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து கொள்ளவும்.முதலில் துவரம் பருப்பை நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும்.அதனை ஒரு தட்டில் கொட்டிவிட்டு, அடுத்து அதை போல் பாசி பருப்பை சிவக்க வறுத்து,துவரம் பருப்புடன் சேர்த்து கொள்ளவும்.அடுத்து உளுந்த பருப்பையும் நன்கு சிவக்க வறுத்து மற்ற பருப்புடன் சேர்த்து கொள்ளவும். பின் காய்ந்த மிளகாயை நன்கு மொறுமொறுவென்று வறுத்து கொள்ளவும்.அதனையும் பருப்புடன் சேர்த்து கொள்ளவும், கடைசியாக மிளகு-யை லேசாக வறுத்து சேர்த்து கொள்ளவும். கூடவே பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் சிறுது நேரம் ஆற விடவும் .பின் மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து  நன்கு நைசாக பொடித்து கொள்ளவும்.சுவையான பருப்பு பொடி தயார்.காற்று புகாத டப்பா அல்லது பாட்டிலில் போட்டு தேவையான போது பயன்படுத்தலாம். சூடான சாதத்துடன் பருப்புப் பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்புக்கள்
  • ஒவ்வொரு பருப்பையும் தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.
  • நன்கு நைசாக பொடித்து கொள்ளவும்.

No comments:

Post a Comment