Wednesday, December 26, 2018

நெல்லிக்காய் துவையல் | Gooseberry Thuvaiyal

நெல்லிக்காய் துவையல், சுவையான மற்றும் சத்தான ஒரு சூப்பர் துவையல். பெரிய நெல்லிக்காயில் நிறைய சத்துகள் உள்ளன,தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது அப்படினு வீட்டில் பெரியவங்க சொல்லுவாங்க,ஆனா நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது கொஞ்சம் துவர்ப்பாக இருக்கும், அதற்கு பதில் இப்படி துவையலாக செய்து சாப்பிடு பாருங்கள், சுவையை அட்டகாசமாக இருக்கும். வாங்க இப்போ இதனை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

நெல்லிக்காய் துவையல் | Gooseberry Thuvaiyal

Preparation Time : 5 mins | Cooking Time : 20 minsServes : 5 to 6 
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் - 6
காய்ந்த மிளகாய் - 10 to 12
உளுந்த பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
பூண்டு - 2 பல் 
புளி -  1/2 நெல்லிக்காய் அளவு 
கறிவேப்பில்லை - 2 கொத்து 
நல்லெண்ணெய் - 1+ 2 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 

செய்முறை
முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து உடவே 1/2 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.அதனை 1 விசில் வேகவைத்து எடுத்து கொள்ளவும் ,ஆறிய  பின் நான்காக வெட்டி கொட்டையை எடுத்து விடவும். பின் ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து முதலில் உளுந்த பருப்பை சேர்க்கவும்.பின் காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை,புளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.அடுத்து அதில் தேங்காய் மற்றும் பூண்டு சேர்த்து ஒரு 2 நிமிடம்  வறுத்து கொள்ளவும். அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும்.மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்த பொருட்களை சேர்த்து பொடித்து கொள்ளவும் பின் அதில் நெல்லிக்காயை சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.பின் ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் அரைத்த துவையல் சேர்த்து நன்கு சுருள வதக்கி எடுத்துக்கொள்ளவும்.சுவையான மற்றும் சத்தான நெல்லிக்காய் துவையல் தயார்.
குறிப்புக்கள் 
  • நெல்லிக்காயின் புளிப்பிற்கு ஏற்ப புளியை கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளவும்.
  • நல்லெண்ணெய் இந்த துவையலுக்கு நல்ல மணத்தை கொடுக்கும்.

No comments:

Post a Comment