பொன்னாங்கண்ணி/பொன்னாங்காணி கீரை கூட்டு, ஒரு சுவையான மற்றும் சத்தான கூட்டு வகை. பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய சத்துகள் உள்ளன,அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்யத்திற்கு ரொம்ப நல்லது.பொன்னாங்கண்ணி கீரையில் பொரியல் மற்றும் கூட்டு வகைகள் செய்யலாம்,இன்னைக்கு நாம் பார்க்க போவது சுலபமாக செய்யக்கூடிய ஒரு கூட்டு வகை,வாங்க எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
Ponnanganni Keerai Kootu | பொன்னாங்கண்ணி கீரை கூட்டு
Preparation Time : 10 mins | Cooking Time : 20 mins | Serves : 2
Recipe Category: Kootu | Recipe Cuisine: Indian
Recipe Category: Kootu | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பொன்னாங்கண்ணி கீரை - 1/2 கட்டு
துவரம் பருப்பு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 3
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறுதளவு
பொன்னாங்கண்ணி கீரை - 1/2 கட்டு
துவரம் பருப்பு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 3
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறுதளவு
செய்முறை
முதலில் துவரம் பருப்புடன் பெருங்காயம் தூள் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு 2 விசில் வேகவிடவும். அதற்குள் கீரையை காம்பு நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.குக்கரில் பிரஷர் அடங்கிய பின் திறந்து அதனுடன் கழுவிய கீரையை சேர்க்கவும்.அடுத்து அதில் சின்ன வெங்காயம் ,பூண்டு,மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு விசில் வேகவிடவும்.குக்கரில் பிரஷர் அடங்கிய பின் திறந்து உப்பு மற்றும் "தாளிக்க" கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.சுவையான மற்றும் சத்தான பொன்னாங்கண்ணி கீரை கூட்டு தயார்.
குறிப்புக்கள் - துவரம் பருப்பிற்கு பதில் பாசி பருப்பு கூட இதற்கு பயன்படுத்தலாம்.
- தேவைக்கேற்ப மிளகாய் தூளை கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment