அவரைக்காய் கூட்டு, சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான கூட்டு. அவரைக்காயில் சாம்பார் மற்றும் பொரியல் செய்வது வழக்கம்,கொஞ்சம் வித்தியாசமாக இந்த கூட்டை செய்து பாருங்கள்,அட்டகாசமாக இருக்கும். இதனை வத்த குழம்பு மற்றும் காரா குழம்புடன் சாப்பிட அருமையாக இருக்கும். வாங்க எப்போ இந்த சுவையான அவரைக்காய் கூட்டை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
அவரைக்காய் கூட்டு | Avarakkai Kootu
Preparation Time : 5 mins | Cooking Time : 20 mins | Serves : 2
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அவரைக்காய் - 15
துவரம் பருப்பு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறுதளவு
அவரைக்காய் - 15
துவரம் பருப்பு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறுதளவு
முதலில் துவரம் பருப்புடன் பெருங்காயம் தூள் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு 3 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து அவரைக்காயை 1/2 இன்ச் துண்டுகளாக மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் அதில் அவரைக்காயை சேர்த்து வேகவிடவும்.
அவரைக்காய் முக்கால் பதம் வெந்தவுடன் அதில் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து அதனையும் வேகவிடவும்.
நன்கு காய்கறிகள் வெந்தபின் அதில் பருப்பு, மசாலா (மஞ்சள் ,மிளகாய்த்தூள் )மற்றும் உப்பை சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.
சுவையான அவரைக்காய் கூட்டு தயார்.
குறிப்புக்கள்
ஒரு கடாயில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் அதில் அவரைக்காயை சேர்த்து வேகவிடவும்.
அவரைக்காய் முக்கால் பதம் வெந்தவுடன் அதில் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து அதனையும் வேகவிடவும்.
நன்கு காய்கறிகள் வெந்தபின் அதில் பருப்பு, மசாலா (மஞ்சள் ,மிளகாய்த்தூள் )மற்றும் உப்பை சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.
சுவையான அவரைக்காய் கூட்டு தயார்.- துவரம் பருப்பிற்கு பதில் பாசி பருப்பு கூட இதற்கு பயன்படுத்தலாம்.
- தேவைக்கேற்ப மிளகாய் தூளை கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment