பால் ஐஸ்,எளிதில் வீட்டில் செய்யக்கூடிய ஒரு சுவையான குச்சி ஐஸ். உங்களுக்கு தள்ளு வண்டியில் விற்கும் பால் ஐஸ் பிடிக்குமென்றால் இந்த பால் ஐஸ் ரெசிபி-யை ட்ரை பண்ணி பாருங்க, தள்ளு வண்டியில் கிடைக்கும் ஐஸ்-யை விட ரொம்ப சூப்பராக இருக்கும். பால் மற்றும் சீனி இருந்தால் போதும் நொடியில் இந்த ஐஸ்-யை செய்துவிடலாம், இந்த சம்மரில் நீங்களும் இதனை செய்து உங்கள் குடும்பத்தோடு என்ஜாய் பண்ணுங்க,குட்டிஸ் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.வாங்க எப்போ இதனை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
பால் ஐஸ் | Paal Ice
Preparation Time : 6 hrs | Cooking Time : 10 mins | Serves : 3
Recipe Category: Dessert | Recipe Cuisine: Indian
Recipe Category: Dessert | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பால் - 1 கப்
சர்க்கரை - 3 - 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 (பொடித்தது)
கார்ன் ஃப்ளோர்- 2 டீஸ்பூன்
பால் - 1 கப்
சர்க்கரை - 3 - 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 (பொடித்தது)
கார்ன் ஃப்ளோர்- 2 டீஸ்பூன்
முதலில் கார்ன் ஃப்ளோர்-யை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் போல பால் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.அடுத்து மீதமுள்ள பாலை ஒரு கடாயில் ஊற்றி நன்கு காய்ச்சவும், பால் பொங்கியபின் 3-4 நிமிடங்கள் லேசான தீயில் கொதிக்க விடவும். பின் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ளவும்.அடுத்து பொடித்த ஏலக்காய் மற்றும் கார்ன் ஃப்ளோர் கரைசலை சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு நிமிடத்தில் பால் லேசாக கெட்டியாகும், அப்போது அடுப்பை அணைத்து விடவும்.பால் நன்கு குளிர்ந்தபின் அதனை ஐஸ் மோல்ட்-யில் ஊற்றி மூடிவிடவும்.பிரிசரில் ஒரு 6-8 மணி நேரம் வைத்து எடுக்கவும். ஐஸ்-யை மோல்ட்-யில் இருந்து எடுக்க சிறுது நேரம் நீரில் காட்டவும்,ரொம்ப சுலபமாக மோல்ட்-யில்இருந்து வந்து விடும்.சுவையான பால் ஐஸ் தயார் .
குறிப்புக்கள் - கார்ன் ஃப்ளோர் மேலே கொடுத்துள்ள அளவை விட அதிகம் பயன்படுத்த வேண்டாம்.
- தண்ணீர் சேர்க்காத பாலை பயன்படுத்தவும்.
- ஐஸ் மோல்ட் இல்லாவிடில் சிறு டம்ளர் அல்லது கிண்ணத்தில் கூட ஊற்றி வைக்கலாம்.
No comments:
Post a Comment