வாழைக்காயை சிப்ஸ், ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ். வாழைக்காய் மட்டும் இருந்தால் போதும் நொடியில் இந்த சிப்ஸ்-யை செய்து விடலாம்.மொறு மொறுவென்று ரொம்ப சுவையாக இருக்கும். வாங்கஇப்போ இந்த சிப்ஸ்-யை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
செய்முறை
வாழைக்காயை சிப்ஸ் | Raw Banana Chips
Preparation Time : 10 mins | Cooking Time : 20 mins | Serves : 2-3
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வாழைக்காய் -1
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு மற்றும் மிளகு தூள் - தேவையானளவு
வாழைக்காய் -1
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு மற்றும் மிளகு தூள் - தேவையானளவு
செய்முறை
முதலில் வாழைக்காயை தோல் சீவி மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து, வெட்டி வைத்துள்ள வாழைக்காயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரிக்கவும்.எண்ணெயில் "ஷ் ஷ் " என்ற சத்தம் அடங்கிய பின் சிப்ஸ்-யை எண்ணெயிலிருந்து எடுத்துவிடவும்.தேவையானளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.சுவையான வாழைக்காயை சிப்ஸ் தயார்.
குறிப்புக்கள் - எண்ணெய் காய்ந்த பின் மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்
- வாழைக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அப்போது தான் சிப்ஸ் நன்கு மொறு மொறுவென்று இருக்கும்.
- விருப்பபட்டால் மிளகு தூளுக்கு பதில் மிளகாய் பொடி சேர்த்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment