Monday, December 10, 2018

ரவை | ரவா இட்லி | Rava Idli

ரவை/ரவா இட்லி, சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் சாப்ட் இட்லி. மாவு அரைக்கணும்,புளிக்க வைக்கணும் அப்படி எதுவும் இதற்கு தேவையில்லை உடனடியாக செய்யக்கூடிய ஒரு இட்லி வகை. கடையில் கிடைக்கும்  ரவை இட்லி mix பாக்கெட் கொண்டு செய்யும் ரவா இட்லியை விட வீட்டிலே செய்யும் இந்த ரவா இட்லி ரொம்ப நன்றாக இருக்கும். உங்களுக்கு ரவை இட்லி பிடிக்குமென்றால் எத்தனை செய்து பாருங்கள்.

ரவை|ரவா இட்லி

Preparation Time : 30 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Breakfast | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப் 
தயிர் - 1/2 கப் 
தண்ணீர் - 1/2 + 1/2 கப் 
Eno சால்ட் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை பழச்சாறு - 1 டீஸ்பூன்  
எண்ணெய் - இட்லி தட்டில் தடவுவதற்கு தேவையானளவு 
துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன் (விருப்பபட்டால் )
தாளிக்க 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
முந்திரி பருப்பு - 1 டீஸ்பூன் 
கடலை பருப்பு - 1 டீஸ்பூன் 
கடுகு மற்றும் உளுந்த பருப்பு  - 1/2 டீஸ்பூன் 
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது ) - 1 டீஸ்பூன்(விருப்பபட்டால் ) 
கறிவேப்பில்லை - 1 கொத்து


செய்முறை
முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பொன்னிறமாக வருது கொள்ளவும், பின் அதில் ரவையை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும். 
ரவை நிறம் மாறாத படி வறுத்து எடுத்து கொள்ளவும், சிறுது நேரம் இந்த கலவையை ஆற விடவும்.
பின் அதில் 1/2 கப் தண்ணீர், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை  ஒரு 20-30 நிமிடம் ஊற விடவும்.
பின் அதில் மீதி 1/2 தண்ணீர்,eno சால்ட் ,எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி விருப்பபட்டால் அதில் துருவிய கேரட் சேர்த்து பின் ரவை கலவையை குழியில் முக்காவாசி அளவு ஊற்றவும்.
இட்லி சட்டியில் ஒரு 12-15 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.சிறுது நேரம் ஆறிய பின் இட்லியை ஒரு ஸ்பூனால் எடுக்கவும்.
சுவையான ரவை இட்லி தயார். சாம்பார் மற்றும் சட்னி-யுடன் பரிமாறவும்.
குறிப்புக்கள்:
  • மினி இட்லி தட்டு அல்லது சதா இட்லி தட்டு எப்படி எது வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.
  • இட்லியை சிறுது நேரம் ஆற விட்டு தட்டிலிருந்து எடுக்கவும் அப்போதுதான் ஒட்டாமல் வரும்.


1 comment:

  1. Eno சால்ட் அவசியம் சேர்க்க
    வேண்டுமா

    ReplyDelete