Wednesday, April 29, 2020

கடலை மிட்டாய் | Kadala mittai

கடலை மிட்டாய், மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு மிட்டாய். வேர்க்கடலை மற்றும் வெல்லம் இருந்தால் போதும் சில நிமிடங்களில் இந்த மிட்டாயை செய்துவிடலாம். வாங்க இப்போ கடலை மிட்டாய் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

கடலை மிட்டாய் | Kadala mittai

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsServes : 15 
Recipe Category: Snack | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வறுத்த தோல் நீக்கிய வேர்க்கடலை - 1 கப் 
வெல்லம்  - 1/2 கப் 
தண்ணீர் - 1/4 கப் 
ஏலக்காய் பொடி - சிறுதளவு 


செய்முறை
கடாயில் வேர்க்கடலையை சிறுதளவு சூடு வரும் வரை வறுத்து கொள்ளவும்.
அடுத்து பாகு வைக்க வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
வெல்ல கரைசலை ஒரு முறை வடிகட்டி அதனை மீண்டும் கொதிக்க விடவும்.
வெல்ல பாகு கல்பதம் வரும் வரை கொதிக்க விடவும். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதில்  ஒரு ஸ்பூனால் சிறிது பாகை எடுத்து தண்ணீரில் விட்டு கைகளால் உருட்டி எடுத்து ஒரு தட்டில் போட்டால் டங்கென்று சத்தம் வரவேண்டும்.அதுதான் கல்பதம்.
ஒரு பாத்திரத்தில் நெய் தடவி தாயர் செய்து வைத்து கொள்ளவும். பாகு பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி அதில் ஏலக்காய் பொடி மற்றும் வேர்க்கடலையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
வேர்க்கடலையை  நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி சமன் படுத்தி கொள்ளவும். 
சிறுது நேரம் கழித்து துண்டுகளாக போட்டுக்கொள்ளவும்.
சுவையான கடலை மிட்டாய் தயார்.
குறிப்புக்கள் 

  • வறுக்காத வேர்க்கடலையாக இருந்தால் முதலில் நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும்.
  • வெல்ல பாகு கல்பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  • வேர்க்கடலை நன்கு ஆற முன்னவே துண்டுகளாக போட்டுக்கொள்ளவும்

Read more »

Tuesday, February 11, 2020

பிரிஞ்சி சாதம் | Brinji Rice

பிரிஞ்சி சாதம், சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் ரைஸ் ரெசிபி. பிரியாணி இலை/பிரிஞ்சி இலை சேர்த்து செய்வதால் இதற்கு இந்த பெயர். இந்த பிரிஞ்சி சாதம் குர்மா மற்றும் நான்-வெஜ் கிரேவி கூட சாப்பிட அருமையாக இருக்கும். இந்த பிரிஞ்சி சாதத்தை தேங்காய் பால் சேர்த்து பண்ணினால் ரொம்ப சுவையாக இருக்கும்,அது எப்படினு இன்னைக்கு நம்ம பார்க்கலாம். 

பிரிஞ்சி சாதம் | Brinji Rice

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Rice | Recipe Cuisine: Indian
Brinji Rice, Coconut milk rice, Bay leaf rice,பிரிஞ்சி சாதம் பிரிஞ்சி சாதம், சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் ரைஸ் ரெசிபி.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1/2 கப்  
தண்ணீர் - 1/2 கப்
தேங்காய் பால் -1/2 கப் 
வெங்காயம் - 1/2
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 2 
 மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 
புதினா  மற்றும் கொத்தமல்லி  - ஒரு கைப்பிடி 
பட்டை - 1/2 அங்குல துண்டு 
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
நெய் - 1  டீஸ்பூன் 
எண்ணெய் - 1 டீஸ்பூன்  
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
அரிசி-யை ஒரு 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை  மெலிதாக, தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்து கொள்ளவும். தேவையான புதினா மற்றும் கொத்தமல்லியை சுத்தப்படுத்தி எடுத்து வைக்கவும்.அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து  எண்ணெய்  ஊற்றி கொள்ளவும். எண்ணெய்  சூடான பின் பட்டை,கிராம்பு ,ஏலக்காய் மற்றும் பிரியாணி இலையை சேர்த்து ஒரு 30 நொடி வதக்கவும். பின் வெங்காயம் மற்றும் சிறுதளவு உப்பு , பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கி கொள்ளவும்.வெங்காயம் நன்கு வதங்கிய பின் அதில் புதினா, கொத்தமல்லி &  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனபின் அதில் தக்காளி மற்றும் தேங்காய் பாலை சேர்க்கவும்.அடுத்து அதில் தண்ணீர் மற்றும்  மஞ்சள் தூள் சேர்த்து  கொள்ளவும்.தேவையானளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதி வர விடவும் .ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும். கடைசியாக நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.குக்கரை மூடி 3 விசில் வேகவிடவும்.சுவையான பிரிஞ்சி சாதம் தயார்.
குறிப்புக்கள் 
  • கொடுத்துள்ள பச்சை மிளகாய் சாதத்திற்கு மிதமான காரத்தை கொடுக்கும்.
  • தக்காளியை ரொம்ப வதக்க வேண்டாம், சாதத்தின் நிறம் மாறிவிடும்.

Read more »

Friday, January 10, 2020

கறிவேப்பில்லை சட்னி | Curry leaves Chutney

கறிவேப்பில்லை சட்னி,ரொம்ப சத்தான மற்றும் சுவையான ஒரு சட்னி வகை. இதனை தோசை மற்றும் இட்லியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். கறிவேப்பில்லையில் நிறைய சத்துகள் உள்ளன, அவை முடி வளர மற்றும் இளநரை தடுக்க பெரிதும் உதவும், தாளிப்புக்கு மட்டுமல்லாமல் கறிவேப்பில்லையை இது மாதிரி  சட்னி செய்து சாப்பிடும் போது அந்த சத்துகள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும். வாங்க எப்போ இந்த சத்தான கறிவேப்பில்லை சட்னி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

கறிவேப்பில்லை சட்னி | Curry leaves Chutney

Preparation Time : 1 hr | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
curry leaves, karuvepillai, chutney,கறிவேப்பில்லை,சட்னி Curry leaves chutney, a delicious and flavorful chutney made from curry leaves and coconut as main ingredients.
தேவையான பொருட்கள்
அரைத்து கொள்ள 
தேங்காய் - 1/2 கப் 
கறிவேப்பில்லை - 1/2 கப் 
பச்சை மிளகாய் 
புளி - சிறுதளவு 
பூண்டு - 1 பல் 
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
தண்ணீர் - தேவையானளவு
தாளிக்க 
நல்லெண்ணெய் - 1/2 டீ ஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீ ஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து


செய்முறை
தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் பொட்டுக்கடலை,கறிவேப்பில்லை,உப்பு,தண்ணீர் தவிர அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை அரைத்து கொள்ளவும்.அடுத்து அதில் பொட்டுக்கடலை,கறிவேப்பில்லை,உப்பு,தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும்.தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் அரைத்த சட்னி மற்றும் தேவையானளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.சத்தான மற்றும் சுவையான கறிவேப்பில்லை சட்னி தயார்.
குறிப்புக்கள் 

  • சட்னி -யை கொதிக்க வீட்டா வேண்டாம், கொதித்தால் ரொம்ப கெட்டியாகி விடும் .
  • தேவைக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.

Read more »

Friday, December 6, 2019

ராகி சப்பாத்தி | கேழ்வரகு சப்பாத்தி | Ragi Chapathi

ராகி சப்பாத்தி, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு சத்தான சப்பாத்தி. ராகி மாவில் களி,கஞ்சி-க்கு பதில் இந்த மாதிரி சப்பாத்தி கூட செய்யலாம், ரொம்ப சுவையாக இருக்கும். சதா சப்பாத்தி செய்யக்கூடிய நேரம் தனக்கும் ஆனால் ராகி சப்பாத்தி கோதுமை சப்பாத்தியை விட ஆரோகியமானது. இதற்கு முன்னாடி நீங்க இந்த ராகி சப்பாத்தியை ட்ரை பண்ணதில்லனா இப்போ ட்ரை பண்ணி பாருங்க,வாங்க இந்த ராகி சப்பாத்தி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.  

ராகி சப்பாத்தி | கேழ்வரகு சப்பாத்தி

Preparation Time : 15 mins | Cooking Time : 15 minsMakes : 8-10 
Recipe Category: Roti | Recipe Cuisine: Indian
ராகி சப்பாத்தி | கேழ்வரகு சப்பாத்தி | Ragi Chapathi ராகி சப்பாத்தி, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு சத்தான சப்பாத்தி. ராகி மாவில் களி,கஞ்சி-க்கு பதில் இந்த மாதிரி சப்பாத்தி கூட செய்யலாம், ரொம்ப சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப் 
ராகி மாவு - 1 கப் (கோபுரமாக )
உப்பு - தேவைக்கேற்ப 
தண்ணீர் - தேவைக்கேற்ப


செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மற்றும் ராகி மாவை அளந்து எடுத்து அதனை  ஒன்றாக கலந்து கொள்ளவும்.பின் அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஒரு 10-15 நிமிடம் ஊற விடவும்.அடுத்து தேவைக்கேற்ப உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். கோதுமை மாவை தொட்டு சப்பாத்தி போல் மெல்லிசாக திரட்டி கொள்ளவும்.தோசை கல் / தவா-வை காய வைத்து சப்பாத்தி போல் இருபுறமும் சுட்டு எடுக்கவும். சுவையான மற்றும் சத்தான ராகி சப்பாத்தி தயார்.இதனை குருமா,சாம்பார் இப்படி எதனுடமும் பரிமாறலாம். நான் இன்னைக்கு பருப்பு கீரையுடன் பரிமாறியுள்ளேன்.
குறிப்புக்கள் 
  • தேவைக்கேற்ப எண்ணெய்-யை சப்பாத்தி சுடும் போது சேர்த்து கொள்ளவும்.
  • சப்பாத்தி சுடும் போது தீ அதிகமாக வைத்து கொள்ளவும்,அப்போதுதான் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

Read more »

Friday, October 4, 2019

அவரைக்காய் கூட்டு | Avarakkai Kootu

அவரைக்காய் கூட்டு, சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான கூட்டு. அவரைக்காயில் சாம்பார் மற்றும் பொரியல் செய்வது வழக்கம்,கொஞ்சம் வித்தியாசமாக இந்த கூட்டை செய்து பாருங்கள்,அட்டகாசமாக இருக்கும். இதனை வத்த குழம்பு  மற்றும் காரா குழம்புடன் சாப்பிட அருமையாக இருக்கும். வாங்க எப்போ இந்த சுவையான அவரைக்காய் கூட்டை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

அவரைக்காய் கூட்டு | Avarakkai Kootu

Preparation Time : 5 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Avarakkai Kootu, Board Beans Kootu,அவரைக்காய் கூட்டு, அவரைக்காய், கூட்டு,Dal,Avarakkai அவரைக்காய் கூட்டு, சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான கூட்டு. அவரைக்காயில் சாம்பார் மற்றும் பொரியல் செய்வது வழக்கம்,கொஞ்சம் வித்தியாசமாக இந்த கூட்டை செய்து பாருங்கள்,அட்டகாசமாக இருக்கும். இதனை வத்த குழம்பு மற்றும் காரா குழம்புடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
அவரைக்காய்  - 15
துவரம் பருப்பு - 1/4 கப் 
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - 1 
மஞ்சள் தூள்  - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள்  - 3/4 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 

செய்முறை
முதலில் துவரம் பருப்புடன் பெருங்காயம் தூள் சேர்த்து  குக்கரில் வைத்து ஒரு 3 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து அவரைக்காயை 1/2 இன்ச் துண்டுகளாக மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் அதில் அவரைக்காயை சேர்த்து வேகவிடவும்.அவரைக்காய் முக்கால் பதம் வெந்தவுடன் அதில் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து அதனையும் வேகவிடவும்.நன்கு காய்கறிகள் வெந்தபின் அதில் பருப்பு, மசாலா (மஞ்சள் ,மிளகாய்த்தூள் )மற்றும் உப்பை சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்.அடுத்து  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.சுவையான அவரைக்காய் கூட்டு தயார்.
குறிப்புக்கள் 
  • துவரம் பருப்பிற்கு பதில் பாசி பருப்பு கூட இதற்கு பயன்படுத்தலாம்.
  • தேவைக்கேற்ப மிளகாய் தூளை கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளலாம்.

Read more »

Thursday, September 26, 2019

வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி| தடியங்காய் தயிர் பச்சடி | Vella Poosanaikai Thayir Pachadi

வெள்ளை பூசணிக்காய் /தடியங்காய் தயிர் பச்சடி, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் பச்சடி. வெள்ளை பூசணிக்காயில் நீர் சத்து அதிகம் உள்ளது, இதனை வெயில் காலங்களில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் உடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும். இதற்கு முன் இந்த தயிர் பச்சடி செய்தது இல்லையென்றால் கண்டிப்பான செய்து பாருங்கள், ரொம்ப கம்மியான நேரத்தில் செய்யக்கூடிய ஒரு பச்சடி. வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி| தடியங்காய் தயிர் பச்சடி

Preparation Time : 10 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Vella poosanikai Thayir Pachadi,Raita,White Pumpkin,வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி, தடியங்காய் தயிர் பச்சடி,வெள்ளை பூசணிக்காய்,தடியங்காய்,தயிர் பச்சடி வெள்ளை பூசணிக்காய் /தடியங்காய் தயிர் பச்சடி, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் பச்சடி. வெள்ளை பூசணிக்காயில் நீர் சத்து அதிகம் உள்ளது, இதனை வெயில் காலங்களில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் உடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணிக்காய்(சிறு துண்டுகளாக நறுக்கியது ) - 1/2 கப் 
தயிர் - 1/2 கப் 
உப்பு - தேவையானளவு 
கொத்தமல்லி இலை - சிறுதளவு 
தாளிக்க 
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது)-1
பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது ) - 1
கடுகு & உளுந்து - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 


செய்முறை
முதலில் வெள்ளை பூசணிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் நறுக்கிய வெள்ளை பூசணிக்காயை மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
பூசணிக்காயை வெந்தபின் அதனை வடிகட்டி நன்கு ஆற விடவும். அடுத்து அதில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் சேர்க்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.சுவையான வெள்ளை பூசணிக்காய்/தடியங்காய் தயிர் பச்சடி தயார்.
குறிப்புக்கள் 
  • தடியங்காவில் தண்ணீரை நன்கு வடித்த பின் அதனை தயிரில் சேர்க்கவும். 
  • நன்கு திக்கான மற்றும் புளிக்காத தயிரை பயன்படுத்தவும்.
  • தேங்காய் எண்ணெய் நல்ல சுவை மற்றும் மணத்தை கொடுக்கும்.



Read more »