கறிவேப்பில்லை சட்னி,ரொம்ப சத்தான மற்றும் சுவையான ஒரு சட்னி வகை. இதனை தோசை மற்றும் இட்லியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். கறிவேப்பில்லையில் நிறைய சத்துகள் உள்ளன, அவை முடி வளர மற்றும் இளநரை தடுக்க பெரிதும் உதவும், தாளிப்புக்கு மட்டுமல்லாமல் கறிவேப்பில்லையை இது மாதிரி சட்னி செய்து சாப்பிடும் போது அந்த சத்துகள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும். வாங்க எப்போ இந்த சத்தான கறிவேப்பில்லை சட்னி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

செய்முறை
கறிவேப்பில்லை சட்னி | Curry leaves Chutney
Preparation Time : 1 hr | Cooking Time : 20 mins | Serves : 2
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அரைத்து கொள்ள
தேங்காய் - 1/2 கப்
கறிவேப்பில்லை - 1/2 கப்
பச்சை மிளகாய்
புளி - சிறுதளவு
பூண்டு - 1 பல்
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
தாளிக்க
நல்லெண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
அரைத்து கொள்ள
தேங்காய் - 1/2 கப்
கறிவேப்பில்லை - 1/2 கப்
பச்சை மிளகாய்
புளி - சிறுதளவு
பூண்டு - 1 பல்
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
தாளிக்க
நல்லெண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
செய்முறை
தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் பொட்டுக்கடலை,கறிவேப்பில்லை,உப்பு,தண்ணீர் தவிர அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை அரைத்து கொள்ளவும்.
அடுத்து அதில் பொட்டுக்கடலை,கறிவேப்பில்லை,உப்பு,தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் அரைத்த சட்னி மற்றும் தேவையானளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சத்தான மற்றும் சுவையான கறிவேப்பில்லை சட்னி தயார்.
குறிப்புக்கள் 


- சட்னி -யை கொதிக்க வீட்டா வேண்டாம், கொதித்தால் ரொம்ப கெட்டியாகி விடும் .
- தேவைக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.
No comments:
Post a Comment