Friday, April 12, 2019

மாங்காய் இனிப்பு பச்சடி | மாங்காய் பச்சடி

மாங்காய்  இனிப்பு பச்சடி, ரொம்ப சுவையான இந்த பச்சடியை அநேக இடங்களில் தமிழ் வருட பிறப்பிற்கு செய்வார்கள். இனிப்பு,புளிப்பு மற்றும் கார சுவையுடன் இந்த பச்சடி அட்டகாசமாக இருக்கும், செய்வதும் ரொம்ப சுலபம். நீங்களும் வரும் தமிழ் வருட பிறப்பிற்கு இந்த சுவையான மாங்காய் இனிப்பு பச்சடியை செய்து பாருங்கள், வாங்க இப்போ இதனை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

மாங்காய் இனிப்பு பச்சடி

Preparation Time : 10 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மாங்காய் - 1(சிறியது )
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடித்தது )
தாளிக்க 
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 

செய்முறை
முதலில் மாங்காயை தோல் சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு வாணலியில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் மாங்காயை போட்டு நன்கு வேக வைத்து கொள்ளவும்.மாங்காய் வெந்தபின் அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.பின் அதில் வெல்லம் சேர்த்து ஒரு 2 நிமிடம் எல்லாம் சேர்த்து வரும் வரை வதக்கவும்.அடுத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதனை பச்சடியில் சேர்க்கவும்.சுவையான மாங்காய் இனிப்பு பச்சடி தயார்.
குறிப்புக்கள் 

  • மாங்காயின் புளிப்பிற்கு ஏற்ப காரம் மற்றும் வெல்லம் சேர்த்து கொள்ளவும்.
  • இனிப்பு உங்கள் சுவைக்கேற்ப கூடவோ அல்லது குரையவோ சேர்த்து கொள்ளலாம்.
  • நல்லெண்ணெய் நல்ல சுவையை பச்சடிக்கு கொடுக்கும்.

No comments:

Post a Comment